முன்னாள் அமைச்சர் உட்பட 16 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தூக்கிய நிதிஷ் குமார்..!
Nitish Kumar expels 16 people including former minister from party
வரும் நவம்பர் 06, 09 ஆம் தேதிகளில் பீஹார் சட்ட மன்ற தேர்தல் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று, 14 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகளும் அறிவிக்கப்படவுள்ளன. இதனையடுத்து பீஹார் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி, ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஷைலேஷ் குமார் உட்பட, 16 நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்கி, அக்கட்சித் தலைவரும் பீஹார் முதல்வருமான நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
குறிப்பாக, முன்னாள் அமைச்சர் ஷைலேஷ் குமார், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ஷியாம் பகதுார் சிங், சுதர்ஷன் குமார். முன்னாள் எம்.எல்.சி.,க்கள் சஞ்சய் பிரசாத், ரன்விஜய் சிங் உட்பட, 16 நிர்வாகிகளை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும்நிதிஷ் குமார் நீக்கி உத்தரவிட்டுள்ளார்.
English Summary
Nitish Kumar expels 16 people including former minister from party