சென்னை: மெட்ரோ பணி... ராட்சத கிரேன் கம்பி அறுந்து விழுந்து விபத்து; ஒருவர் பலி!
Chennai metro work accident
சென்னையின் சோழிங்கநல்லூரில் மெட்ரோ ரயில் பணியின் போது பெரிய விபத்து ஏற்பட்டது. 30 டன் எடையுள்ள கான்கிரீட் பகுதியை தூக்கிக்கொண்டிருந்த ராட்சத கிரேனின் கம்பி திடீரென அறுந்து, 50 அடி உயரத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த இருவர் கீழே விழுந்தனர்.
இதில், ஜார்கண்டைச் சேர்ந்த பிக்கி குமார் (23) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், சந்தோஷ் லோரா (23) எனும் தொழிலாளர் தீவிர காயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்துக்கான காரணம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டனவா என்பதை உறுதிப்படுத்த செம்மஞ்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Chennai metro work accident