'நந்தன்' பட கோரிக்கை நடந்தேறியது: காலத்திலும் நிகழாத மாற்றம்: 79-வது சுதந்திர தினத்தில் தலித் பஞ்சாயத்து தலைவர்கள் கொடியேற்றம்..!
Dalit Panchayat leaders hoist the flag on 79th Independence Day in the spirit of the film Nandan
நாடு முழுவதும் இன்று 79 வது சுதந்திர தின நிகழ்வுகள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. 12 வது தடவையாக பிரதமர் நரேந்திர மோடி இன்று மூவர்ண கொடியை ஏற்றி மக்கள் மத்தியில் உரையாற்றினார். மாநிலங்களில் முதல்வர்கள் கொடிகளை ஏற்றி சுதந்திர தினத்தினை நினைவு கூர்ந்தனர். அதன்படி, சென்னை கோட்டில் தமிழா முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியேற்றினார்.
இந்நிலையில், ‘நந்தன்’ கோரிக்கை நடந்தேறியது என சசி நடிப்பில் வெளியான திரைப்படத்தின் இயக்குனர் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்றை அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நந்தன் திரைப்படம் பார்த்த பிறகு, ‘சுதந்திரம் என்றால் என்ன?’ என்ற கேள்வி எஎல்லோருக்குள்ளும் எழுந்த ஒன்றை இருந்து இருக்கும். காரணம், தேசத்தந்தை மகாத்மா காந்தி கூறியது போல் ‘எப்பொழுது ஒரு பெண் தன்னந்தனியாக நடுஇரவில் யாருடைய துணையில்லாமல் சாலையில் நடந்து செல்கிறாளோ அப்போதுதான் நாம் உண்மையான சுதந்திரம் பெற்றோம்’ என அர்த்தம் கொள்வதா?
அல்லது பட்டியலின மக்கள் போட்டியிடும் தனித்தொகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் ஆதிக்க சாதிக்கார்களின் குறுக்கீடு இல்லாமல் ஒரு தலித் போட்டியிடுகிறார்களோ அதுதான் உண்மையான சுதந்திரமா..? என்ற கேள்வியும், அதனுடன் சேர்ந்த ரணமான வழியையும் நிச்சயம் அந்த படம் தந்திருக்கும்.

அந்த படத்தை பார்க்கும் போது அதில் சசிகுமாரின் கதாப்பாத்திரம் நமது மனதோடு ஒன்றி உறவாடி இருக்கும். காரணம், ஒரு பட்டியலின தலைவர் ஊராட்சி மன்ற தலைவர் இருக்கையில் அமர்கிறாரோ, அது தான் உண்மையான சுதந்திரமா..? பெயர் பலகையில் அவருடைய பெயர் இடம் பெறுமா..?
பள்ளிகளில் நடைப்பெறும் சுதந்திர தினவிழா மற்றும் குடியரசு தினவிழா நிகழ்ச்சிகளில் பட்டியலினத் தலைவர் சுதந்திரமாக கொடியேற்றி மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்க முடியுமா..? வங்கி கணக்கு முழுவதும் அவரே கையாள்கிறாரோ அன்றைக்குதான் உண்மையான சுதந்திரம் என்று கருத்தில் கொள்ளலாமா..? இப்படி பல்வேறு கேள்விகள் பட்டியலின மக்கள் தொடர்ந்து அனைவரும் மனதிலும் எழுந்த ஒரு போது கேள்வியாக இருந்து இருக்கும்.
இந்நிலையில், இன்றைய சுதந்திர தின நிகழ்வில் அப்படி ஒன்று நடந்திருப்பதை இரா.சரவணன் பதிவிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
‘நந்தன்’ கோரிக்கை நடந்தேறியது. தலித் பஞ்சாயத்து தலைவர்கள் பலரும் பேசினார்கள். “தலித் பஞ்சாயத்து தலைவர்கள் கொடியேற்றுவதை அனைத்து பி.டி.ஓ.க்களும் உறுதி செய்ய வேண்டும்.
எக்காரணம் கொண்டும் வேறு யாரும் கொடியேற்றக் கூடாது, மீறினால் கடும் நடவடிக்கை” என அரசு எச்சரித்ததாக சொன்னார்கள். சில பஞ்சாயத்துகளில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட, எந்தக் காலத்திலும் நிகழாத மாற்றமாக 79-வது சுதந்திர தினத்தில் தமிழ்நாட்டில் தற்போது பொறுப்பில் உள்ள தலித் பஞ்சாயத்து தலைவர்கள் அனைவரும் கொடியேற்றி இருக்கிறார்கள். மகத்தான மாற்றத்திற்கு துணை நின்ற நல்லோர் எல்லோருக்கும் ‘நந்தன்’ சார்பில் நன்றி.. என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Dalit Panchayat leaders hoist the flag on 79th Independence Day in the spirit of the film Nandan