'உயர் நீதிமன்றத்தை விட உச்ச நீதிமன்றம் மேலானது அல்ல: அரசியல் சட்ட அடிப்படையிலானவை': தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் ..!
Chief Justice PR Kavai said that the Supreme Court is not superior to the High Court
உச்ச நீதிமன்ற பார் அசோசியேசன் சார்பில் நடந்த சுதந்திர தின விழாவில் நடைபெற்றது. இதில் பல நீதிபதிகள் மற்றும் பார் அசோசியேசன் சார்பில் பலரும் கலந்து கொண்டனர். இதில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது,
'உயர்நீதிமன்றத்தை விட, உச்ச நீதிமன்றம் ஒன்றும் மேலானது அல்ல, அரசியமைப்பில் இரண்டுமே சமமானவை' என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது, உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றும் வக்கீல்களை உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளாக நேரடியாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு பதில் அளிக்கும் 'நாங்கள் உத்தரவிட முடியாது'என்ற வகையில் அவர் இவ்வாறு பேசியுள்ளார்.
இது தொடர்பில் அவர் அங்கு பேசுகையில், நீதிபதிகள் நியமிக்கப்படும் போது சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றமே அந்த முடிவை எடுக்க வேண்டும் என்றும், ஒருவரை நீதிபதியாக நியமிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற கொலீஜியம், உயர்நீதிமன்ற கொலீஜியத்துக்கு உத்தரவிட முடியாது. உச்சநீதி மன்றம், உயர்நீதிமன்றத்தை காட்டிலும் மேலானதல்ல என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், இரண்டு நீதிமன்றங்களும் அரசியல் சட்ட அடிப்படையிலானவை எனவும், அவை ஒன்றுக்கொன்று குறைந்தவையோ, உயர்ந்தவையோ அல்ல என்று பேசியுள்ளார். எனவே, நீதிபதிகள் நியமனத்தை பொறுத்தவரை, முதல் முடிவை உயர்நீதிமன்ற கொலீஜியமே எடுக்க வேண்டும் என்றும், நாங்கள் பெயர்களை பரிந்துரைத்து, அவற்றை பரிசீலிக்குமாறு மட்டுமே கேட்டுக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். அவர்கள் அதில் திருப்தி ஆன பின்னரே, அந்த பெயர்கள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்துக்கு வருகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நீதி, சமம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய ஒரு இந்தியாவை உருவாக்குவது இன்னமும் முடிக்கப்படாத பணியாகவே இருக்கிறது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், நீதிபதிகள், வக்கீல்கள் ஆகியோரின் கடமை என்பது சட்டத்தை விளக்குவதாக மட்டும் இருக்கக்கூடாது என்றும், ஜனநாயகத்தின் அடிப்படையான சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தின் மதிப்புகளை நிலைநிறுத்தி பாதுகாப்பதும் ஆகும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Chief Justice PR Kavai said that the Supreme Court is not superior to the High Court