'சக்தி திருமகன்' திருட்டு கதையா..? இயக்குனர் அளித்துள்ள விளக்கம் என்ன..? - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் 'சக்தித் திருமகன்' படம் செப்டம்பர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் அக்டோபர் 24-ஆம் தேதி வெளியாகி ஸ்ட்ரீமிங் ஆகிக்கொண்டுள்ளது. இந்த படம் சமூகத்தில் இருக்கும் பிரச்சினைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தினை கதை என்னுடையது, கதை திருடப்பட்டுள்ளது என சுபாஷ் சுந்தர் என்பவர் பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் குறிப்பிட்டுள்ளதாவது: இக்கதையில் மாதவனை வில்லனாக மனதில் வைத்து 03 வருடங்களுக்கு முன் எழுதியதாகவும், ட்ரீம் வாரியர்ஸ் -க்கு அனுப்பியதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். அருண் பிரபுவின் முதல் படம் ’அருவி’யை தயாரித்தது ட்ரீம் வாரியர்ஸ் என்பதால் இந்த கதை அங்கிருந்து சென்றிருக்கக் கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தான் எழுதிய கதை பக்கங்களின் சில இணைப்புகளையும் இணைத்துள்ளார்.

 

 

அத்துடன், இதை சும்மா விடுவதாக இல்லை, சின்ன சின்ன மாற்றங்களை செய்துவிட்டுத் தப்பித்துவிடலாம் என்றால் எப்படி..? கதையை தனிப்பட்ட பதிவேட்டின் பதிப்புரிமை (copy rights of individual register ) செய்து வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், டாக்குமென்ட்ஸ் எல்லாம் தன்னிடம் இருக்கிறதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 2022 இது தொடர்பான படங்களை பதிவிட்டுளேன். கேஸ் போடுவதாகவும் உள்ளேன். அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க உதவுங்கள், ஒருவரைப் போல் ஒருவர் இவ்வளவு பொருத்தங்களுடன் சிந்திக்க முடியாது, அப்படியே இருந்தாலும் முதலில் சிந்தித்து பதிவு செய்பவருக்கே உரிமை. ஒழுக்கத்தை, நேர்மையை போதிப்பதாக படம் இருப்பதைப்போல அதை எடுப்பவர்களும் இருந்தால் நன்று என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த குற்றசாட்டை `சக்தித் திருமகன்' படத்தின் இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் மறுத்துள்ளார். மேலும்,  அவர் தனது வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவில் "மிகவும் தவறான அவதூறு. சொந்த உழைப்பில் பல வருடங்கள் உழைத்து எழுதியது. நன்றி வணக்கம்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த கதை திருட்டு சம்பவம் தமிழ் சினிமாவில் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The directors explanation regarding the Shakti Thirumagan story plagiarism issue


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...




Seithipunal
--> -->