சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்த நாள்: 02 நாட்கள் பிரதமர் குஜராத்தில் சுற்றுப்பயணம்..!
PM Modi to visit Gujarat tomorrow
சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டம் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் சர்தார் வல்லபாய் படேலை நினைவு கூறும் வகையில் 150 ரூபாய் நாணயத்தை பிரதமர் வெளியிடவுள்ளார்.
இதனை முன்னிட்டு, பிரதமர் மோடி நாளை 02 நாள் குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். நாளை மாலை ஏக்தா நகர், கேவாடியா செல்லும் அவர் அங்கு எலக்ட்ரிக் பஸ் சேவைகளை தொடங்கி வைக்கவுள்ளார். அத்துடன், சுமார் ரூ.1,400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கியும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டவுள்ளார்.
இதனை தொடர்ந்து, பிஎஸ்எப், சிஆர்பிஎப் உள்ளிட்ட படையினரின் அணிவகுப்பை பிரதமர் மோடி ஏற்றுக் கொள்கிறார். குறித்த அணிவகுப்பின் போது, ஜார்க்கண்டில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளிலும், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் துணிச்சலை வெளிப்படுத்திய சிஆர்பிஎப் மற்றும் எல்லைப் பாதுகாப்பு படையில் 21 பேருக்கு வீரதீர செயலுக்கான பதக்கங்களை வென்றவர்களும் கௌரவிக்கப்படவுள்ளனர்.
English Summary
PM Modi to visit Gujarat tomorrow