கிழக்கு லடாக் நிலவரங்கள் குறித்து இந்தியா- சீனா இடையே உயர்மட்ட ராணுவ பேச்சுவார்த்தை..!
High level military talks between India and China on peace and security in Eastern Ladakh
கிழக்கு லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில், அமைதி மற்றும் பாதுகாப்பைப் பராமரிப்பதில் கவனம் செலுத்தும் வகையில், எல்ஏசியில் சிறப்பு ராணுவ உயர்மட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. கடந்த அக்டோபர் 25 அன்று இந்திய எல்லைப் புள்ளியில் கார்ப்ஸ் கமாண்டர் அளவிலான கூட்டம் நடைபெற்றது.
இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் தெவிவித்துள்ளதாவது: அக்டோபர் 25 அன்று கிழக்கு லடாக்கில் உள்ள மோல்டோ-சுஷுல் எல்லைப் பகுதியில் 23-வது சுற்று கார்ப்ஸ் கமாண்டர் அளவிலான கூட்டம் நடைபெற்றதாக குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் குறித்த பேச்சுவார்த்தை, ஆகஸ்ட் மாதம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி இடையே சிறப்பு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இரு ராணுவத்தினரிடையே இதுபோன்ற முதல் சந்திப்பு இதுவாகும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த சந்திப்பின் முக்கிய நோக்கம், உண்மையான கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் அமைதியும், ஸ்திரத்தன்மையையும் நிலைநாட்டுவது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா- சீனா இரு நாடுகளும் எல்லைப்பகுதியில் நிலவி வரும் பிரச்சினைகளை தீர்க்கவும், அமைதியை கூட்டாக பாதுகாக்கவும், ராணுவம், ராஜதந்திர வழிகளில் தொடர்ந்து தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டன என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
English Summary
High level military talks between India and China on peace and security in Eastern Ladakh