திரைப்படங்களிலிருந்து ஆன்மிகப் பயணம் வரை...! - நடிகையின் புது அவதாரம்...!
From movies to spiritual journey The actress new avatar
நடிகை சுரேகா வாணி, தமிழில் காதலில் சொதப்புவது எப்படி, ஜில்லா, எதிர்நீச்சல், மெர்சல் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களிடையே தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர்.சமீப ஆண்டுகளில் திரைப்படங்களில் அதிகம் தோன்றவில்லை என்றாலும், சுரேகா வாணி சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்டிவாகவும் பிரபலமாகவும் இருக்கிறார்.

தன் தனிப்பட்ட வாழ்க்கை, பயண அனுபவங்கள் மற்றும் ஆன்மிக தருணங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருவது வழக்கம்.இந்நிலையில், சமீபத்தில் அவர் தனது மகளுடன் சேர்ந்து திருமலை திருப்பதிக்கு பயணம் செய்துள்ளார். அங்கு எடுத்த அழகிய புகைப்படங்களை தனது சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.
மேலும், அவர் முழங்காலில் ஏறி திருமலை மலை படிகளை ஏறும் வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.அந்த வீடியோவில் தாய், மகள் இருவரின் பக்தி வெளிப்படும் விதம் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பலரும் “தாய்-மகள் ஜோடி உண்மையான பக்தியின் உதாரணம்!” என்று பாராட்டி வருகின்றனர்.தற்போது, அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, ஆயிரக்கணக்கான லைக்குகள் மற்றும் கமெண்டுகளை குவித்து வருகிறது.
English Summary
From movies to spiritual journey The actress new avatar