'சேட்டன் வந்தெல்லே' ; சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டம்; வெஸ்ட் இண்டீசை 05 விக்கெட்டுகளால் வீழ்த்திய இந்தியா அரையிறுதிக்கு முன்னேற்றம்..!
India advances to the semi finals after defeating West Indies by 5 wickets thanks to Sanju Samsons heroics
இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற சூப்பர் 08 சுற்றின் கடைசி போட்டில் வெஸ்ட் இண்டீஸ்- இந்தியா அணிகள் பல பரீட்சை நடத்தின.
ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா முதலில், பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர்களில், 195 ரங்கால் என்ற இம்மலையை இலக்கை நிர்ணயித்தது.
இரண்டாவது இன்னிங்க்சில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா, 11 பந்தில் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த இஷான் கிஷ் 06 பந்தில், 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சியை கொடுத்தனர்.

03-வது விக்கெட்டுக்கு சஞ்சு சாம்சன் உடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். சஞ்சு சாம்சன் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். அவர் 26 பந்தில் 06 பவுண்டரி, 03 சிக்சருடன் அரைசதம் கடந்தார்.
தொடர்ந்து, சூர்யகுமார் யாதவ் 16 பந்தில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 04-வது விக்கெட்டுக்கு சஞ்சு சாம்சனுடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். இவர் 13-வது ஓவரில் தொடர்ந்து 3 பவுண்டரிகள் அடித்து அதிரடி காட்டினார். அவர் 15 பந்தில் 27 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா களம் இறங்கினார். 14 பந்தில் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சிவம் தூபே இந்தியாவின் வெற்றிக்கு கடைசி 10 பந்தில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், துபே அதிரடி காட்டினார்.
இந்த ஓவரின் முதல் பந்தை சிக்சர் அடித்த சஞ்சு சாம்சன். அடுத்த பந்தை பவுண்டரிக்கு விளாசினார். இதன் மூலம், இந்தியா 19.2 ஓவரில் 05 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்து 05 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சஞ்சு சாம்சன் 50 பந்தில் 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். துபே 08 ரன்கள் எடுத்திருந்தார்.
English Summary
India advances to the semi finals after defeating West Indies by 5 wickets thanks to Sanju Samsons heroics