இஸ்ரேல் - அமெரிக்கா கூட்டுத் தாக்குதல்; 'ஒரே நேரத்தில் ஈரானில் 48 தலைவர்கள் காலி' என அமெரிக்க அதிபர் பேட்டி..!
US President says 48 leaders are vacant in Iran at the same time
இஸ்லாமிய குடியரசிற்கு எதிராகவும், அணு ஆயுத போட்டி காரணமாகவும், அமெரிக்க-இஸ்ரேலிய இணைந்து ஈரான் மீது வான்வெளி டிரோன் தாக்குதல்கள் நடத்தியுள்ளது.
இந்த கூட்டுத் தாக்குதல்களில் 48 ஈரானியத் தலைவர்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அமெரிக்க ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்துள்ளதாவது: "நாங்கள் அடைந்து வரும் வெற்றியை யாராலும் நம்ப முடியவில்லை. ஒரே அடியில் 48 தலைவர்கள் வீழ்த்தப்பட்டனர். மேலும் இது மிக வேகமாகவும் நகர்ந்து கொண்டிருக்கிறது." என குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பெரும் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த சூழலில், ட்ரம்ப் இவ்வாறு பேட்டியளித்துள்ளார்.
இதனிடையே ஈரானின் நவீன Jamaran-class போர்க்கப்பல் மீது தாக்குதல் நடத்தி அழித்ததாக அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது. மேலும் இருநாடுகளின் தாக்குதலில் ஈரானின் முன்னாள் அதிபர் மகுமுத் அகமதிநெச்சாத் படுகொலை செய்யப்பட்டதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது.
English Summary
US President says 48 leaders are vacant in Iran at the same time