Operation Epic Fury; ஈரானின் பதிலடி தாக்குதலில் 03 அமெரிக்க வீரர்கள் பலி; 05 பேர் படுகாயம்..!
3 American soldiers killed and 05 seriously injured in Irans retaliatory attack
இஸ்லாமிய குடியரசிற்கு எதிராகவும், அணு ஆயுத போட்டி காரணமாகவும், அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்து ஈரான்மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக ஈரானும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த பதில் தாக்குதலில், அமெரிக்க ராணுவ வீரர்கள் 03 பேர் கொல்லப்பட்டதாகவும், 05 வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதேநேரம் ஈரான் மீதான தாக்குதல்கள் மற்றும் பதிலடி நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன என அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

அத்துடன் ஈரான், ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக கூறியுள்ளதை அமெரிக்கா மறுத்துள்ளது.
நேற்று நடந்த வான்வழி தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி உள்ளிட்ட பலர் கொல்லப்பட்ட்டுள்ளனர். இதற்கு பலி தீர்க்கும் வகையில், ஈரான் நடத்தி வரும் தொடர் தாக்குதலில் பல உயிரிழப்புகள் நேர்ந்துள்ளன.
ஈரானின் இந்தத் தொடர் தாக்குதல்களால் மத்திய கிழக்கின் அரசியல் நிலைத்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் வளை குடா நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது.
English Summary
3 American soldiers killed and 05 seriously injured in Irans retaliatory attack