அவதூறு கருத்து: ராகுல் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்; தர்மேந்திர பிரதான் கண்டனம்..!
Dharmendra Pradhan condemns Rahul Gandhis public apology for his remarks on PM Modi
பீஹாரில் தேர்தல் பிரசாரத்தின் போது லோக் சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியையும், சாத் பண்டிகையும் கடுமையாக விமர்சித்தார். அதாவது மோடி 'ஓட்டுகளுக்காக எதையும் செய்வார் என்றும், பீஹாரில் நிதிஷ் குமார் அரசு பாஜவின் ரிமோட் கண்ட்ரோல் மூலம் நடக்கிறது என குற்றம் சுமத்தியுள்ளார். பிரதமர் மோடி குறித்த ராகுலின் கடுமையான கருத்துக்கு, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தர்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: பீகார் புனித பூமியிலிருந்து, நாட்டுப்புற நம்பிக்கையின் மாபெரும் திருவிழாவான சாத் பண்டிகையை ராகுல் காந்தி அவமதித்திருப்பது, லட்சக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளை ஆழமாக காயப்படுத்துகிறது.
சனாதன கலாச்சாரத்தின் மீதான அவரது வெறுப்பை பிரதிபலிக்கிறது மற்றும் மரியாதைக்குரிய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி மீது காங்கிரஸ் கட்சியின் ஆழமான வேரூன்றிய வெறுப்பையும் விரக்தியையும் அம்பலப்படுத்துகிறது. ராகுல் காந்தி மனநிலை, அரசியல் விரக்தி மற்றும் தோல்வி பயத்தால் இவ்வாறு பேசி வருகிறார். பிரதமர் மற்றும் அவரது மரியாதைக்குரிய தாய்க்கு எதிராக முன்பு அநாகரீகமாக காங்கிரஸ் கட்சியினர் பேசியிருந்தனர். அதே மனநிலை இது.
ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் மற்றும் அவர்களது மகா கூட்டணி எப்போதும் பீகாரின் ஏழைகள், விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களின் அபிலாஷைகளை நசுக்கி, காட்டாச்சி ராஜ்யத்தை ஊக்குவித்து வருகின்றன. இன்று, தோல்வியின் விரக்தியால் அவர்கள் இத்தகைய அநாகரீகமான மொழியைப் பயன்படுத்துகிறார்கள் என்பது தெளிவாகிறது. இருப்பினும், பீகார் மக்கள் வளர்ச்சி மற்றும் நல்லாட்சியை விரும்புகிறார்கள், உறவினர்களுக்கு ஆதரவான அரசியல் அல்ல.
சத் கொண்டாட்டம் மற்றும் பிரதமரை அவமதிக்கும் கருத்துக்களுக்கு, ராகுல் காந்தி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்'' என தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
English Summary
Dharmendra Pradhan condemns Rahul Gandhis public apology for his remarks on PM Modi