சினிமாவில் அறிமுகமாகும் மகேஷ் பாபுவின் குடும்ப வாரிசு; இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!
Mahesh Babus niece to make her debut in cinema
தெலுங்குத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் மகேஷ் பாபு. இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் SSMB 29 படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தில் பாலிவூட் பிரியங்கா சோப்ரா மற்றும் மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில், அவரது குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு திரைப்பட உலகில் நுழைய உள்ளதாக தகவல்கள் வைரலாகி வருகிறது.
மகேஷ் பாபுவின் சகோதரி மஞ்சுளா கட்டமனேனி, இவருடைய இளைய மகள் ஜான்வி ஸ்வரூப்பின் சில புகைப்படங்களை சமூக ஊடகங்களில் அவர் பகிர்ந்துள்ளார். இன்று, பிறந்த நாள் கொண்டாடும் அவரது மகளின் படங்களுடன் ஒரு பதிவையும் பகிர்ந்து குறிப்பிட்டுள்ளதாவது:
"என் சின்னப் பெண் ஜான்வி ஸ்வரூப். வளர்ந்து தன் சொந்த ஒளியில் அடியெடுத்து வைக்கத் தயாராக இருக்கிறாள். அவள், ஓர் ஒளியின் மரபைச் சுமக்கிறாள். இப்போது, அவள் பிரகாசிக்க வேண்டிய நேரம் இது. அவளுடைய மந்திரம், அவளுடைய திறமை, அவளுடைய இதயம் ஆகியவற்றை நான் நம்புகிறேன். நான் எப்போதும் அறிந்ததை உலகம் விரைவில் பார்க்கும். திரை உனக்காகக் காத்திருக்கிறது, என் அன்பே - உலகமும் அப்படித்தான். நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன். பிறந்தநாள் வாழ்த்துகள், என் ஜானு'' என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருவதோடு, ஜான்வி ஸ்வரூப் சினிமாவில் நடிப்பதற்கு தயாராகிவிட்டதாகவும், அதனையே அவருடைய அம்மா இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக இணையவாசிகள் குறிப்பிட்டுள்ளனர்.
English Summary
Mahesh Babus niece to make her debut in cinema