ராணுவம் பிடித்து விட்டதாக கூறிய ஷிவாங்கியுடன் ஜனாதிபதி போட்டோ; பாகிஸ்தானின் அபாண்ட பொய் அம்பலம்..!
President Murmu Poses With Air Force Pilot Shivangi Singh Pak Said Had Been Captured
நாட்டின் குடியரசு ஜனாதிபதி திரவுபதி முர்மு, இன்று (அக்டோபர் 29-ஆம் தேதி) ரபேல் விமானத்தில் பறந்தார். அப்போது அம்பாலா விமானப்படை தளத்தில் ஸ்குவாட்ரன் லீடர் ஷிவாங்கி சிங்குடன் படம் எடுத்துக் கொண்டார். இந்த தற்போது வைரலாகியுள்ளது. காரணம் ;ஆபரேஷன் சிந்துார்' நடவடிக்கையின் போது ஷிவாங்கியை பிடித்து விட்டதாக பாகிஸ்தான் ராணுவம் பொய் கூறியுள்ளமை இதன் மூலம் அம்பலமாகியுள்ளது.
ஆபரேஷன் சிந்துார் நடந்த போது, பாகிஸ்தான் ராணுவம் ஏராளமான தரப்பில் கூறப்பட்ட பொய்களை உண்மையென சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டன. ஷிவாங்கி சிங் கைது செய்யப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகச் செய்திகள் வெளியிட்டதோடு, அவர் போர்க் கைதி என்றும், அவரது போர் விமானம் சிந்தூர் நடவடிக்கையின் போது சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் பாகிஸ்தான் ஊடகங்கள் பொய்யான செய்திகளை வெளியிட்டன.

அதாவது, தங்கள் நாட்டு போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டதை பற்றி வெளியுலகுக்கு மறைத்த பாகிஸ்தான், இந்தியாவின் போர் விமானங்களை வீழ்த்தி விட்டதாகவும், இந்திய பெண் விமானி ஷிவாங்கி சிங்கை தங்கள் நாட்டு ராணுவம் பிடித்து விட்டதாகவும் பொய்யான தகவல்களை கட்டுக்கட்டாக பரப்பியது. ஆனால், இதனை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது.
இந்நிலையில் இன்று ரபேல் விமானத்தில் பறப்பதற்கான அம்பாலா விமானப்படை தளம் சென்ற ஜனாதிபதி திரவுபதி முர்மு, அங்கிருந்த ஸ்குவாட்ரன் லீடர் ஷிவாங்கி சிங்குடன் போட்டோ எடுத்துக் கொண்டுள்ளார்.
இந்த புகைப்படம் வெளியான நிலையில், பாகிஸ்தான், தங்கள் நாட்டு ராணுவம் பிடித்து விட்டதாக கூறிய ஷிவாங்கி சிங் புகைப்படத்தில் உள்ளார். இதனால், அந்நாட்டு அபாண்டமாக கூறிய பொய் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஷிவாங்கி சிங், வாரணாசியை சேர்ந்தவர். இவருக்கு 29. 2017-ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் பணியில் சேர்ந்தார். தற்போது ரபேல் விமானங்களை இயக்கி வரும் இவர், முன்னதாக மிக் 21 விமானங்களையும் இயக்கியுள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
President Murmu Poses With Air Force Pilot Shivangi Singh Pak Said Had Been Captured