சீனாவின் பொருளாதாரத்தை இந்தியா விரைவில் விஞ்சும்: சிங்கப்பூர் முன்னாள் பிரதமர்..!
Former Singapore Prime Minister says India will soon surpass Chinas economy
சீன பொருளாதாரத்தை, இந்தியா விரைவில் முந்தும் என சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ சியன் லுாங் கணித்துள்ளார். இது குறித்து சிங்கப்பூரில் சாத்தம் ஹவுஸில் லீ சியன் லுாங் பேசியதாவது:
ஆசியாவில் பெரும் அதிகார மாற்றம் ஏற்படும் என்றும், இந்தியா எழுச்சி பெறுகிறது, சீனா சுருங்குகிறது எனவும், இந்தியாவின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட விரைவில் சீனாவின் பொருளாதாரத்தை விஞ்சக்கூடும் என குறிப்பிட்டுள்ளார். அத்துடன், சீனாவின் மக்கள் தொகை சுருங்கிய நிலையில், இந்தியா இளமையாகவும் வளர்ச்சி வேகத்துடன் நிறைந்து காணப்படுகிறது எனவும் சுட்டிக்காட்டியுளளார்.
ஆர்சிஇபி போன்ற பிராந்திய வர்த்தகக் குழுக்களில் இந்தியாவின் எதிர்கால பங்கேற்பு ஆசியாவில் பொருளாதார சக்தி சமநிலையை வியத்தகு முறையில் மாற்றும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், உலகளாவிய ஜாம்பவான்கள் விநியோகச் சங்கிலிகள், மறுசீரமைப்பு முதலீடு பீஜிங்கை விட்டு விலகும் நிலையில், புதுடில்லி, உலகளாவிய வளர்ச்சியின் அடுத்த பெரிய காந்தமாக உருவாகி வருகிறதாகவும் லீ சியன் லுாங் பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Former Singapore Prime Minister says India will soon surpass Chinas economy