நவம்பர் 25-இல் அயோத்தி ராமர் கோவில் கொடியேற்ற விழா: கோவில் கட்டுமானத்திற்கு ரூ.3,000 கோடி நன்கொடை; நிரிபேந்திர மிஸ்ரா தகவல்..! - Seithipunal
Seithipunal


உத்தரபி பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோவில் கட்டுமான பணிக்கான நிதி திரட்டும் பிரசாரம் கடந்த, 2022 ஆண்டு தொடங்கப்பட்டநிலையில், கடந்த ஆண்டு ஜனவரி, 22-ஆம் தேதியன்று கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இந்நிலையில், வரும் நவம்பர் 25-ஆம் தேதி அயோத்தி ராம் மந்திர் கொடியேற்றம் நடைபெறவுள்ளது. இதையொட்டி, இக்கோவிலின்  கட்டுமான குழு தலைவர் நிரிபேந்திர மிஸ்ரா நேற்று அளித்த அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது:

அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் கட்டுமான பணிக்கு பொது மக்கள், 3,000 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்ததாகவும்,கோவில் கட்டுமான பணிகள், 1,800 கோடி ரூபாயில் கட்ட திட்டமிடப்பட்டது. இதில், 1,500 கோடி ரூபாய் இதுவரை செலவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், வரும், நவம்பர் 25-ஆம் தேதி நடக்கும் கொடியேற்ற நிகழ்வில், பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்று கொடிமரத்தில் கொடியேற்றுவார் என்றும் அறிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க கட்டுமான பணிக்கு நன்கொடை கொடுத்தவர்கள் அனைவரும் அழைக்கப்படுவர் என்றும், இதில், 8,000 பக்தர்கள் பங்கேற்கின்றதாக நிரிபேந்திர மிஸ்ரா கூறியுள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ayodhya Ram Temple flag hoisting on November 25


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...




Seithipunal
--> -->