மத்தியில் பிரதமராக மோடியும், மாநிலத்தில் முதல்வராக நிதிஷ் குமாரும் தொடர்வார்கள்; பதவிகள் காலி இல்லை'; அனல் பறக்கும் அமித்ஷா தேர்தல் பிரச்சாரம்..! - Seithipunal
Seithipunal


பீஹார் மொத்தம் உள்ள 243 தொகுதிகளுக்கு சட்டசபைக்கு தேர்தல் வரும் நவம்பர் 06 மற்றும் 09 ஆம் தேதிகளில் இருக்கட்டங்களாக நடைபெறவுள்ளது. 14 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகளும் அறிவிக்கப்படவுள்ளன. இதனால் அம்மாநிலத்தில் ஆளும் மற்றும் எதிர்கட்சிகளுக்கிடையே தேத்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

அதன்படி, சமஸ்திபூரில் தே.ஜ., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி சமீபத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்-ஷா நேற்று பிரசாரம் செய்தார். இவர், தர்பங்கா, பெகுசாராய், சமஸ்திபூர் என அடுத்தடுத்து மூன்று இடங்களில் தே.ஜ., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.

அப்போது மக்கள் மத்தியில் பேசிய அமித்-ஷா கூறியதாவது: பீஹார் சட்டசபை தேர்தலில், பா.ஜ., சார்பில் நிறைய இளைஞர்களுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. ஆனால், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் .உள்ளிட்ட கட்சிகள் இளைஞர்களுக்கு வாய்ப்பு தரவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கு மாறாக, லாலு பிரசாத் யாதவ், தன் மகன் தேஜஸ்வியை முதல்வராகவும், சோனியா தன் மகனை பிரதமராகவும் ஆக்க பார்க்கின்றனர். ஆனால், உண்மை என்னவெனில், தற்போதைக்கு இரு பதவிகளுமே காலியாக இல்லை என்று அனல் பறக்கும் விதமாக பேசியுள்ளார்.

அதாவது, மத்தியில் பிரதமராக மோடியே தொடர்வார் என்றும், பீகார் மாநிலத்தில் முதல்வராக நிதிஷ் குமாரே தொடர்வார் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், 'மஹாகட்பந்தன்' கூட்டணி என்பது ஊழல் கூட்டணி என்று விமர்சித்துள்ளதோடு, கால்நடை தீவனத்தில் ஊழல், அரசு வேலைக்கு நிலம் லஞ்சமாக பெற்று ஊழல் என லாலு அடுத்தடுத்த ஊழல்களில் சிக்கி இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், காங்கிரஸ் மீது 12 லட்சம் கோடி ரூபாய்க்கு ஊழல் வழக்கு இருக்கிறதாகவும், பிரிவினைவாதத்தை துாண்டும், 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' இயக்கம் பாட்னாவின் புல்வாரி ஷெரிப் பகுதியில் துடிப்பாக இருந்தது என்றும், நாடு முழுதும் தேடுதல் வேட்டை நடத்தி அந்த அமைப்பின் உறுப்பினர்களை சிறையில் தள்ளியது தே.ஜ., கூட்டணி அரசு தான். தடை விதித்ததும் அதே அரசு தான் என்றும் அதிரடியாக பேசியுள்ளார்.

தொடர்ந்து அமித்ஷா பேசுகையில், ஒருவேளை பீஹாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா'-வின் உறுப்பினர்கள் சிறையில் இருப்பார்கள் என நினைக்கிறீர்களா..? அவர்கள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்படுவார்கள் என்று அறிவித்துள்ளார்.

அத்துடன், வாக்காளர் உரிமை யாத்திரைக்காக சில மாதங்களுக்கு முன் ராகுல் பீஹார் வந்திருந்தார். அதாவது, வாக்காளர் பட்டியலில் ஊடுருவல்காரர்களின் பெயர்கள் இடம் பெற வேண்டும் என்பதே ராகுல் மற்றும் லாலுவின் விருப்பம். அதற்காகவே வாக்காளர் உரிமை என்ற பெயரில் ராகுல் யாத்திரை நடத்தியதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும், பீஹாரில் மீண்டும் காட்டாட்சியை கொண்டு வர வேண்டும் என்பது தான் தேஜஸ்வி மற்றும் ராகுலின் நோக்கமாகவுள்ளது என்றும், பீஹாரை பொறுத்தவரை தே.ஜ., கூட்டணி என்பது பஞ்ச பாண்டவர்கள் போன்றது. ஐந்து வலிமையான கூட்டணி கட்சிகளை கொண்டது என்றும் குறிப்பிட்டுளளார். இந்த தேர்தலிலும் 'இண்டி' கூட்டணி அடியோடு விரட்டி அடிக்கப்படும் என்றும், தே.ஜ., கூட்டணி வரலாற்று வெற்றியை பீகாரில் பதிவு செய்யும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்-ஷா பிரச்சாரத்தின் போது பேசியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Amit Shahs election campaign says Modi will continue as Prime Minister at the Centre and Nitish Kumar as Chief Minister in the state


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...




Seithipunal
--> -->