சிறப்பாக பணியாற்றிய காவலர்கள், அரசு ஊழியர்களுக்கு நற்சான்றிதழ்..ஆட்சியர் சந்திரகலா வழங்கினார்! - Seithipunal
Seithipunal


சுதந்திர தினத்தை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்கள், அரசு ஊழியர்களுக்கு நற்சான்றிதழ்களை ஆட்சியர் சந்திரகலா வழங்கினார், 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் முனைவர் சந்திரகலா தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

நமது இந்தியா நாடு சுதந்திரம் அடைந்ததை நாடு முழுவதும் இன்று 79-வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறோம், அதன்படி இன்று  நாடு முழுவதும் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.  இதை ஒட்டி டெல்லியில் பிரதமர் மோடி மூவர்ண கொடியை ஏற்றி வைத்து மக்களிடையே உரையாற்றினார். இதே போல் தமிழகத்திலும் பல்வேறு மாநிலங்களிலும் முதலமைச்சர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து முப்படைகளின் அணிவகுப்பினை ஏற்று   சுதந்திர தின விழா சிறப்புரையாற்றினர். 

இந்தநிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 79-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அரசு ஆண்கள்   மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் முனைவர் சந்திரகலா மூவர்ண தேசியகொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார், பின்னர் திறந்த ஜீப்பில் சென்று காவலர்களின் அணிவகுப்பை பார்வையிட்டு  அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

முன்னதாக இந்திய நாட்டிலேயே முதன்முறையாக ராணிப்பேட்டையில் நிறுவப்பட்ட அண்ணல் மகாத்மாகாந்தி  சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார் ,தொடர்ந்து மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்கள், அரசு ஊழியர்களுக்கு நற்சான்றிதழ்களை ஆட்சியர் சந்திரகலா வழங்கினார், விழாவில் வேளாண்மைத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை, சிறுபான்மையினர் நலத்துறை, வருவாய்த்துறை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட  துறைகளின் மகளிர் திட்டம் உள்பட சார்பில் 64 பயனாளிகளுக்கு ரூபாய் 2 கோடியே 20 லட்சம் மதிப்பில் அரசின் மாபெரும் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார் விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால், வருவாய் அலுவலர் தர்மலிங்கம் கோட்டாட்சியர் ராஜராஜன், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் பரதநாட்டியம், ஆடல், பாடல்  உட்பட கண்கவர் கலை நிகழ்ச்சிகள்நடைபெற்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The special certificates were awarded by the Collector Chandrakala to the police officers and government employees who worked exceptionally


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->