''தொடர்ந்து வெற்றி பெற்று நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன்'' என ரஜினிக்கு பிரதமர் மோடி வாழ்த்து..! - Seithipunal
Seithipunal


இந்திய திரையுலகில் என்று 'சூப்பர் ஸ்டார்' என்று சொன்னால் அது ரஜினி ஒருவர்தான். இந்த வயதிலும் அவருடைய ஸ்டைலும், அழகும் மாறாத ஒன்று. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத்தின் அதிரடி இசையில் ரஜினிகாந்த நடித்துள்ள 'கூலி' திரைப்படம் வெளியாகி உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. 

இந்நிலையில், திரையுலகில் 50 ஆண்டுகளை பூர்த்தி செய்த 'சூப்பர் ஸ்டார்' நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது:

''திரைப்பட உலகில் புகழ்மிக்க 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்துகள். அவரது பயணம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது, அவரது நடிப்பில் பலவகையான பாத்திரங்கள் தலைமுறைகள் கடந்து மக்கள் மனங்களில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. வரும் காலங்களில் அவரது தொடர்ச்சியான வெற்றிக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் வாழ்த்துகிறேன்.''என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Prime Minister Modi congratulates Rajinikanth on completing 50 years in the film industry


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->