இன்று டிரம்ப்-புடின் சந்திப்பு: எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகாது: ரஷ்யா அதிரடி அறிவிப்பு..!
Russia announces that no agreement will be signed at the Trump and Putin meeting today
உக்ரைன் உடனான போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புடின் இருவரும் அலாஸ்காவில் இன்று (ஆகஸ்ட் 15) சந்தித்து பேச இருக்கின்றனர். உலக நாடுகள் மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இந்த சந்திப்பு பார்க்கப்படுகிறது. முக்கியமாக இந்தியா இதனை உன்னிப்பாக அவதானித்து வருகிறது. காரணம் இந்த பேச்சுவார்த்தையில் தோல்வியடைத்தால் ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள 50 வீத வரியை வீட, இந்தியாவிற்கு மேலதிக வரி விதிக்கப்படும் என்றும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், டிரம்ப்-புடின் சந்திப்பின் போது எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாக போவது இல்லை என்று ரஷ்யா அறிவித்து இந்தியாவின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.
அதாவது, ரஷ்யா, உக்ரைன் நாடுகள் இடையேயான போர், அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கை ஆகியவை குறித்து இந்த சந்திப்பின் போது முக்கிய பேச்சுவார்த்தை நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 03 ஆண்டுகளை கடந்து நீடிக்கும் ரஷ்ய-உக்ரைன் போர் இன்றைய சந்திப்பின் மூலம் முற்று பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், டிரம்ப் உடனான சந்திப்பின் போது எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாக போவதில்லை என்று ரஷ்யாவின் க்ரெம்ளின் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து க்ரெம்ளின் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியுள்ளதாவது;
இந்த பேச்சுவார்த்தை மிக குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டதால்,இதன் முடிவுகள் எப்படி இருக்கும் என்று கணிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இருநாடுகளின் தலைவர்களும் மிகவும் சிக்கலான பிரச்னைகள் பற்றி விவாதிக்க உள்ளனர். எனவே, எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகாது என்று தெரிவித்துள்ளார். மேலும், இருநாடுகளின் புரிந்துணர்வுகள், பல்வேறு விவகாரங்களில் எதிர்கால ஒத்துழைப்பு போன்ற அம்சங்களில் ஒரு புரிந்து கொள்ளலை இந்த பேச்சுவார்த்தை ஏற்படுத்த செய்யும் என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Russia announces that no agreement will be signed at the Trump and Putin meeting today