மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் ஏட்டு கைது! - Seithipunal
Seithipunal


நெல்லையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் ஏட்டு அதிரடியாக கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக தமிழகத்தில் சிறுமிகளுக்கு எதிராக காலில் வன்கொடுமையானது அதிகரித்துள்ளது, குறிப்பாக பள்ளி மாணவிகளை ஆசிரியர்கள் பாலில் தொந்தரவு கொடுப்பது போன்ற சம்பவங்களும் அரங்கேறி வருகிறது ,இந்தநிலையில் நெல்லையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் ஏட்டு அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

நெல்லை மாநகர ஆயுதப்படையில் தலைமை காவலராக பணியாற்றி வந்த சசிகுமார் தனது குடும்பத்துடன் பாளையங்கோட்டை ஆயுதப்படை வளாக குடியிருப்பில் வசித்து வருகிறார். . 2002-ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்த இவர்  பாளையங்கோட்டை அருகே ஒரு பகுதியில் வசித்துவரும் பெண்ணின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்ததாக கூறப்படுகிறது.

அப்போது, அந்த பெண்ணின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்த நேரத்தில் அவளுடைய 14 வயது மகளுக்கு சசிகுமார் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து 9-ம் வகுப்பு படித்து வரும் அந்த சிறுமி தனது தாயிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு அந்த பெண் இதுகுறித்து போலீசாரிடம் தெரிவிக்கவில்லையாம். இதனால் மனமுடைந்த  மாணவி, சக மாணவிகளின் உதவியுடன் ஒன் ஸ்டாப் சென்டர் குழந்தைகள் காப்பகம் எண்ணை தொடர்பு கொண்டு புகார் கொடுத்துவிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக குழந்தைகள் நலத்துறை சார்பில் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி, சசிகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து நேற்று முன்தினம் இரவில் கைது செய்தனர். சசிகுமாரின் சொந்த ஊர் குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி என்பது குறிப்பிடத்தக்கது.இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Police officer arrested for sexually harassing a student


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->