கள்ளச்சாராயத்தல் வந்த வினை: இந்தியர்கள் உள்பட 13 பேர் உயிரிழப்பு, 51 பேருக்கு டயாலிசிஸ், 21 பேருக்கு பறிபோன பார்வை: குவைத்தில் கொடூரம்..! - Seithipunal
Seithipunal


மேற்காசிய நாடான குவைத்தில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டை, சேர்ந்தவர்கள் பல்வேறு துறைகளில் அங்கு வேலை செய்து வருகின்றனர். பெரும்பாலும் அங்கு இந்தியாவை சேர்ந்த பலர் கட்டட தொழிலாளர்களாக பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அந்நாட்டில் மது விற்பனைக்கு தடை உள்ளது. இந் நிலையில் கடந்த 09-ஆம் தேதி முதல் கள்ளச்சாராயம் குடித்த பலர் உடல் நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மது விற்பனை தடை செய்யப்பட்ட குவைத்தில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 13 பேர் உயிரிழந்த நிலையில், 51 பேருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன் காரணமாக 21 பேரின் பார்வை பறிபோயுள்ளது. இன்னும் 31 பேருக்கு செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறதாகவும், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இவ்வாறு கள்ளச்சாராயம் குறித்தவர்கள் மெத்தனால் கலந்த சரக்காக இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது. இவ்வாறு கலப்பு சாராயம் குடித்த 63 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். குறிப்பாக ஆசிய நாடுகளைச் சேர்ந்த, 13 பேர் இறந்துள்ளனர். 

இவ்வாறு கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களில் 10 பேர் இந்தியர்கள் எனவும், அவர்களில் 05 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. உயரிழந்தவர்களில் ஒருவரான சச்சின் கேரள மாநிலம் கண்ணூரின் இரினவு பகுதியை சேர்ந்தவர். இவர் 03 ஆண்டுகளாக குவைத்தில் பணியாற்றி வருகிறார். இன்று அவரது உடல் விமானம் மூலம் சொந்த ஊருக்கு கொண்டு வரப்படவுள்ள நிலையில், அவருக்கு திருமணமாகி குழந்தை உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தடை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை விற்றவர்களை கண்டுபிடிக்க குவைத் போலீசார் சிறப்பு படை அமைத்துள்ளனர். இதுவரை சந்தேகத்தின் அடிப்படையில் 10 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ இந்திய தூதரகம் உதவி எண்(+965-65501587, WhatsApp and regular calls) அறிவித்துள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

13 people have died and 21 have lost their eyesight after drinking illicit liquor in Kuwait


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->