கலால் விதிகளில் குறிப்பிட்டுள்ள நேரக்கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும்.. கலால் துறை எச்சரிக்கை!
The time restrictions specified in the bylaws must be adhered to Warning from the licensing department
புதுச்சேரி கலால் விதிகளில் குறிப்பிட்டுள்ள நேரக்கட்டுப்பாடுகளை அனைத்து உரிமதாரர்களும் சரியாக கடைபிடிக்குமாறு வலியுறுத்தப்பட்டது.
புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள மதுபான பாரில் கல்லூரி மாணவன் கொலை செய்யப்பட்டான்.இதில் முக்கிய குற்றவாளி மற்றும் PUBயின் உரிமையாளரை உள்ளடக்கிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.இதுதொடர்பாக எதிர் கட்சிகள் கடும் கண்டனத்தை பதிவு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர் .ரெஸ்டோ பார்களை முழுமையாக மூடக்கோரி மகிளா காங்கிரஸ் சார்பில் சார்பில் மிஷன் வீதியில் உள்ள ரெஸ்டோ பார்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவத்தை தொடர்ந்து புதுச்சேரியில் நேர கட்டுப்பாட்டை மீறி இயங்கிய 13 ரெஸ்டோ பார்களுக்கு கலால்துறை சீல், உரிமம் தற்காலிக ரத்து செய்யப்பட்டது.
புதுச்சேரி நகர பகுதியில் இயங்கி வரும் ரெஸ்டோ பார்களின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து நேர கட்டுப்பாட்டை மீறி இயங்கிய 13 ரெஸ்டோ பார்களின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து புதுச்சேரி அரசு கலால் துறை சீல் வைத்துள்ளது.
இந்தநிலையில் புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள மதுபான உரிமம் பெற்ற ஓட்டல்கள் மற்றும் உணவகங்களின் உரிமதாரர்களுடன், புதுச்சேரி கலால் துறை அதிகாரிகளால், கலால் துறை அலுவலகத்தில் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில், புதுச்சேரி கலால் விதிகளில் குறிப்பிட்டுள்ள நேரக்கட்டுப்பாடுகளை அனைத்து உரிமதாரர்களும் சரியாக கடைபிடிக்குமாறு வலியுறுத்தப்பட்டது. அதற்கேற்றவாறு தமது உணவகங்களுக்கு வரும் விருந்தினர்களுக்கும் நேரக் கட்டுப்பாடுகளை அறிவுறுத்தவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
தமது உணவகங்களுக்கு வரும் விருந்தினர்களால் ஏதும் பிரச்சினைகள் ஏற்படின் அவற்றை தாங்களே முற்பட்டு எதிர்கொள்ளாமல், உடனே சம்மந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு தெரிவித்து சட்டப்படி அவற்றை தீர்க்குமாறும் வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.
இவ்வறிவுறுத்தல்களை மீறும் உரிமதாரர்கள் மீது தகுந்த துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கண்டிக்கப்பட்டது.
English Summary
The time restrictions specified in the bylaws must be adhered to Warning from the licensing department