பாஜக முன்னாள் தலைவரும் நாகாலாந்து ஆளுநருமான இல.கணேசன் இன்று காலமானார்..! - Seithipunal
Seithipunal


நாகாலாந்து ஆளுநரும் பா.ஜ., முன்னாள் தலைவருமான இல கணேசன் 80 வயதில் இன்று காலமானார். நாகாலாந்து ஆளுநராக இருந்தாலும், அவ்வப்போது சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கு வந்து தங்குவது இல கணேசனின் வழக்கம். 

நீரிழிவு நோயால் பாதத்தில் ஏற்பட்ட புண் காரணமாக அவர் சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின், வீட்டில் ஓய்வில் இருந்த போது, கடந்த 05-ஆம் தேதி, கால் மரத்துப் போன நிலையில் மயங்கி விழுந்தார்.

கடந்த 08-ஆம் தேதி அதிகாலை 03:00 மணியளவில் தலைச்சுற்றல் மற்றும் வாந்தி உணர்வு ஏற்பட்டதால், சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர்  மருத்துவ பரிசோதனையில், அவரது தலையில் ரத்தக்கட்டு இருப்பது கண்டறியப்பட்டு அதற்கான அறுவை சிகிச்சை முடிந்து, தீவிர கண்காணிப்பு பிரிவில் இல கணேசன் வைக்கப்பட்டு, கண்காணித்து வரப்பட்டார்.

இந்நிலையில், இன்று ( ஆகஸ்ட் - 15) அவர் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Former BJP leader and Nagaland Governor L Ganesan passed away today


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->