நாகாலாந்து மாநில ஆளுநர் இல. கணேசன் காலமானார்!
Nagaland La Ganesan death
நாகாலாந்து மாநில ஆளுநரும் பாஜக மூத்த தலைவருமான இல. கணேசன், சென்னையில் தனது இல்லத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு கீழே விழுந்தார்.
இதில் தலையில் கடுமையான காயம் ஏற்பட்டதால், அவர் அவசரமாக ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மருத்துவர்கள் அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். ஆனால், நிலைமை மோசமடைந்த நிலையில், தொடர்ந்து செய்யப்பட்ட சிகிச்சையும் பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.
தமிழகத்தைச் சேர்ந்த இல. கணேசன், முன்பு மணிப்பூர் ஆளுநராகவும், தற்போது நாகாலாந்து ஆளுநராகவும் பணியாற்றி வந்தார். அவரது மறைவு அரசியல் வட்டாரத்திலும், மாநில மக்களிடமும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Nagaland La Ganesan death