பள்ளி மாணவர்களுக்கு பாலியல் கல்வி கற்பிக்கப்பட வேண்டும் - போக்ஸோ வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி!
Supreme Court Sex education in school
போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில், 15 வயது சிறுவனுக்கு ஜாமின் வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. சிறுவனுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் 376வது பிரிவின் கீழ் கற்பழிப்பு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் அலோக் அரதே ஆகியோர் அமர்வில் விசாரிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிறுவனுக்கு ஜாமின் வழங்கி, அதனைச் சுற்றிய பரபரப்பான கருத்துக்களையும் தெரிவித்தனர். அவர்கள் கூறியதாவது:
“பாலியல் கல்வி 9-ம் வகுப்பிலிருந்து அல்ல, அதற்கு முன்னரே, மிக இளம் வயதிலிருந்தே குழந்தைகளுக்கு கற்பிக்கப்பட வேண்டும். மேல்நிலைப் பள்ளி பாடத்திட்டங்களில் பாலியல் கல்வி ஒரு முக்கியப் பகுதியாக சேர்க்கப்படுவது அவசியம்.
அப்போதுதான், பருவ வயதில் ஏற்படும் உடல் மற்றும் மன மாற்றங்களை குழந்தைகள் புரிந்துகொள்வார்கள். அதனுடன் தொடர்புடைய பொறுப்புணர்வு, எச்சரிக்கை ஆகியவற்றையும் கற்றுக்கொள்ளலாம்.
இதில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்,” என்று நீதிபதிகள் வலியுறுத்தினர்.
English Summary
Supreme Court Sex education in school