சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை கண்காணிப்புக்குழுக் கூட்டம்..மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் பங்கேற்பு! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டம் மாவட்ட அளவிலான சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை கண்காணிப்புக்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட அளவிலான சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை கண்காணிப்புக் குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள்
தலைமையில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தங்க தமிழ்செல்வன்
அவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.என்.இராமகிருஷ்ணன்
அவர்கள் (கம்பம்), திரு.ஆ.மகாராஜன் அவர்கள் (ஆண்டிபட்டி),
திரு.கே.எஸ்.சரவணக்குமார் அவர்கள் (பெரியகுளம்) ஆகியோர் முன்னிலையில்
நடைபெற்றது.

அரசின் பல்வேறு சிறப்புத் திட்டங்களை ஒருங்கிணைத்து
செயல்படுத்தவும்,  அவற்றைக் கண்காணிக்கவும் மாவட்ட அளவில்
சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை கண்காணிப்பு அலகு
உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசின் திட்டங்கள் தொடர்ந்து
கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட அளவில் சமூக-பொருளாதாரம், கல்வி,
சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு குறித்த தரவுகளை சம்பந்தப்பட்ட
துறைகளிடமிருந்து சேகரித்து, தரவு சார்ந்த பகுப்பாய்வு அறிக்கையினை
தயார் செய்து, திட்டமிடப்பட்ட இலக்கினை உரிய காலத்திற்குள் எய்தி மக்களின்
பயன்பாட்டிற்குக் கொண்டு வர ஆவன செய்வதே சிறப்புத் திட்டச்
செயலாக்கத்துறையின் முக்கியப் பணியாகும்.

மேலும், அரசின் முக்கிய திட்டங்களின் செயல்பாட்டு நிலையை,
மதிப்பாய்வு செய்ய, ஒவ்வொரு காலாண்டின் முதல் வாரத்திலும் மாவட்ட
அளவிலான கண்காணிப்புக் குழு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில் இன்றைய தினம் நடைபெற்றக் கூட்டத்தில் தமிழக அரசின்
முதன்மை திட்டங்களான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்,
புதுமைப்பெண் திட்டம் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டம் ஆகிய திட்டங்களின்
தரவு சார்ந்த பகுப்பாய்வு அறிக்கை விளக்கக்காட்சி (Powerpoint) மூலம்
எடுத்துரைக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஐ.மகாலட்சுமி,
ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி அபிதா ஹனீப், நகர்மன்றத்

தலைவர்கள் திருமதி ரேணுபிரியா பாலமுருகன் (தேனி-அல்லிநகரம்), திருமதி
சுமிதா சிவக்குமார் (பெரியகுளம்), இணை இயக்குநர்கள் மரு.கலைச்செல்வி
(ஊரகம் மற்றும் சுகாதாரப்பணிகள்), திரு.கோயில் ராஜா (கால்நடை
பராமரிப்புத்துறை) , துணை இயக்குநர் (புள்ளி இயல்) திருமதி ஜான்சிராணி,
உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு.முருகையா, மாவட்ட சுகாதார அலுவலர்
மரு.ஜவஹர்லால், தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.முத்துச்சித்ரா,
மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி சியாமளா தேவி, ஒருங்கிணைந்த
குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி ரேவதி, புள்ளி இயல் அலுவலர்
திருமதி பெ.மீனாராணி, நகராட்சி ஆணையாளர்கள், செயல் அலுவலர்கள்
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Special Project Implementation Department Monitoring Committee Meeting District Collector Ranjeet Singhs Participation


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->