நெல்லையில் 7 மாணவர்கள் எலிக்காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதி!
Nellai Food Safety viral fever
நெல்லை மாவட்டம் திடியூரில் உள்ள பி.எஸ்.என். பொறியியல் கல்லூரியில் சுகாதாரமற்ற குடிநீர் பயன்படுத்தியதால் 7 மாணவர்கள் எலிக்காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று கல்லூரி விடுதி வளாகத்தில் திடீர் ஆய்வு நடத்தினர்.
அப்போது நீர் சுத்திகரிப்பு வசதிகள் போதாமை மற்றும் சுகாதார குறைபாடுகள் பலவும் வெளிப்பட்டன. இதனையடுத்து, மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வரை கல்லூரி மூடப்பட வேண்டும் என சுகாதாரத்துறை நோட்டீஸ் வழங்கியது.
இதேவேளை, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் விடுதி உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அதில் உணவு தயாரிப்பு மற்றும் சேமிப்பு பகுதியில் சுகாதார விதிமீறல்கள் இருப்பது தெரியவந்தது. இதனால், இரு உணவகங்களின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
English Summary
Nellai Food Safety viral fever