எமகாதகனுக்கு என்ன கூட்டம் பாருங்க.. கொலை சம்பவத்தில் சூப்பர் ஸ்பிரட்ர்களாக சப்போர்ட்டர்ஸ்.. திருப்பூரில் சம்பவம்.! - Seithipunal
Seithipunal


வழிப்பறி கொள்ளையில் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்ட இளைஞரின் உடலுக்கு, நல்லவன் போல கூட்டாளிகள் வாகன பேரணி நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பூர் மாவட்டத்திலுள்ள எம்.ஜி.ஆர் காலனி பகுதியை சார்ந்தவன் சம்சுதீன். இவனின் மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. சம்பவத்தன்று கூட்டாளிகளுடன் நடந்த மோதலில் கூட்டாளிகளால் சம்சுதீன் கொலை செய்யப்பட்டான். 

இவன் மீது பல்வேறு வழக்குகள் இருந்தாலும் இளைஞர்களை கைகள் வைக்கும் பொருட்டு அவர்களுக்கு தேவையான உதவி செய்ததால், இவனது இறுதிச்சடங்கிற்கு இளைஞர்கள் பெருமளவில் குவிந்துள்ளனர். மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்ததும் சடலம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவசர ஊர்திக்கு பின்னாலேயே வாகனப் பேரணியும் தொடர்ந்துள்ளது. 

மேலும், அங்கு கட்டுக்கடங்கா கூட்டமும் கூடியுள்ளது. திருப்பூரில் ஏற்கனவே கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மேலும், இதனை காவல்துறையினரும் கண்டு கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. 

இந்த கொலை சம்பவம் தொடர்பாக சம்சுதீன் கூட்டாளியான கார்த்திகேயன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களை தேடி வருகின்றனர். மேலும், கடந்த வருடத்தில் திருப்பூரில் பட்டப்பகலில் கூட்டத்தில் கத்தியை உருவி வழக்கில் வீடியோ வெளியாகி கைதான நிலையில், தற்போது ஒரு கொள்ளைக்காரன், கொலைகாரனுக்கு இளைஞர்கள் ஆதரவு தெரிவித்த சம்பவம் நடந்துள்ளது. இது போன்றவர்களை இரும்புக்கரம் கொண்டு காவல்துறையினர் ஒடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tiruppur Rowdy Murder Friends Violent Lockdown Rules 5 June 2021


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->