200 மில்லியன் பார்வைகளைக் கடந்து ஹரிஷ்கல்யானின் "தாராள பிரபு" படத்தின் பாடல் சாதனை..! - Seithipunal
Seithipunal


இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்து இயக்கத்தில் விந்தணுதான விழிப்புணர்வை மையமாக வைத்து நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான படம் தாராள பிரபு: கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் கதை ரீதியாகவும் பாடல்களாலும் கவனம் பெற்றது. 

இதில் 'பாக்கு வெத்தலை மாத்தி முடிச்சு' பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த பாடலுக்கு அனிருத் இசையமைத்து இருந்தார். குறிப்பாக திருமண நிகழ்வுகளில் இப்பாடல் கட்டாயம் இடம்பெறும் பாட்டாக அமைந்திருந்தது.

இந்த நிலையில், இப்பாடல் யூடியூபில் இதுவரை 20 கோடி பார்வைகளைக் கடந்து அசத்தியுள்ளது. அனிருத் கொடுத்த ஹிட் பாடல்களில் முக்கியமான இடத்தை இப்பாடலும் பெற்றுள்ளது. இவருடைய இசையில் மூணு திரைப்படத்தில் இடம்பெற்ற 'வை திஸ் கொலவெறி' பாடலை யூடியூபில் 525 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.

இந்த 'தாராள பிரபு' படத்துக்கு -8 இசையமைப்பாளர்கள் இசையமைத்திருக்கின்றனர். அனிருத், ஷான் ரோல்டன், விவேக்-மெர்வின், இந்நோ கெங்கா, மேட்லி ப்ளூஸ், கேபர் வாசுகி, தி பேன்ட் ஊர்க்கா, பரத் சங்கர். ஒரு படத்திற்கு அதிக இசையமைப்பாளர் இசையமைத்துள்ளமை இதுவே முதல் முறை. இந்த 08 இசையமைப்பாளர்களும் ஆளுக்கொரு பாட்டுக்கு இசையமைத்திருப்பது குறிப்பிடத்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The song from Harish Kalyan film Dharala Prabhu has crossed 200 million views breaking the record


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...


செய்திகள்



Seithipunal
--> -->