'தி கேர்ள் பிரண்ட்' படத்தில் ராஷ்மிகா..! ஆனால் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் வேறொருவர்...! யார் அந்த லக்கி லேடி...?
Rashmika movie The Girlfriend But first chosen one someone else Who is that lucky lady
தென்னிந்திய சினிமாவின் ‘நேஷனல் கிரஷ்’ ராஷ்மிகா மந்தனா தற்போது முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்துக்கொண்டிருப்பதோடு, பெண்களை மையமாகக் கொண்ட கதைகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் வெளியான தம்மா படத்தில் கலக்கி ரசிகர்களின் மனதை கவர்ந்த ராஷ்மிகா, தற்போது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தி கேர்ள் பிரண்ட் திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களை சந்திக்கத் தயாராக இருக்கிறார்.

தேசிய விருது பெற்ற இயக்குநர் ராகுல் ரவீந்திரன் இயக்கும் இந்த படத்தில், தசரா புகழ் தீட்சித் ஷெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதுவரை வெளியான போஸ்டர்கள், டீசர், ட்ரெய்லர் ஆகியவை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இதனால், படத்தைச் சுற்றியுள்ள எதிர்பார்ப்பு வானளாவி உள்ளது.இப்படம் வரும் நவம்பர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அதனை முன்னிட்டு படக்குழு புரமோஷனில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதன் இடையே, இந்த படத்தைப் பற்றிய சில வியப்பூட்டும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அதில் முக்கியமான ஒன்று – “தி கேர்ள் பிரண்ட்” படத்துக்கு ராஷ்மிகா மந்தனா முதலில் தேர்வு செய்யப்பட்டவர் அல்ல! என்று இயக்குநர் ராகுல் ரவீந்திரன் தானே வெளிப்படுத்தியுள்ளார்.அவர் தெரிவித்ததாவது,"நான் ஒவ்வொரு கதையையும் உருவாக்கிய பிறகு, அதை என் நெருங்கிய நண்பர்களான வெண்ணிலா கிஷோர், சமந்தா, அதிவி சேஷ், சுஜீத் போன்றோரிடம் முதலில் பகிர்வது எனது வழக்கம்.
அதுபோல தி கேர்ள் பிரண்ட் கதையையும் சமந்தாவிடம் கொடுத்தேன். அவர் முழு கதையையும் படித்துவிட்டு, ‘இது எனக்கு பொருத்தமான கதை இல்லை, ஆனால் ராஷ்மிகாவுக்கு பக்கா பொருந்தும்!’ என்று சொன்னார்.அதைத்தொடர்ந்து கதையை ராஷ்மிகாவிடம் பகிர்ந்தேன். இரண்டு நாட்களில் அவர் வாசித்து, எந்த தயக்கமும் இன்றி “ஓகே” என்றார்” என்று தெரிவித்துள்ளார்.இதனால், தி கேர்ள் பிரண்ட் படம் ராஷ்மிகாவின் கைகளில் விழுந்தது ஒரு ‘டெஸ்டினி ட்விஸ்ட்’ என்பதுதான் ரசிகர்களிடையே பெரும் பேச்சாகியுள்ளது
English Summary
Rashmika movie The Girlfriend But first chosen one someone else Who is that lucky lady