சின்னமன் வாசனையில் பறக்கும் மீன்! -குளிர்காலத்தை சூடாக்கும் ‘Churros Bungeoppang’ புயல்!
flying fish with scent cinnamon Churros Bungeoppang storm that warm up winter
Churros Bungeoppang சாக்லேட் அல்லது கிரீம் நிரப்பிய மீன் வடிவ பேஸ்ட்ரி.
இது கொரியாவின் குளிர்கால ஸ்ட்ரீட் ஸ்நாக் ஹீரோ.(Bungeoppang) என்பது மீன் வடிவம் கொண்ட ஸ்நாக். இதன் உள்ளே சாக்லேட், கஸ்டர்ட் கிரீம், ரெட் பீன் பேஸ்ட் அல்லது நடெல்லா போன்ற இனிப்பான நிறைகள் நிரப்பப்பட்டிருக்கும்.Churros பதிப்பில், இதன் மேல் சர்க்கரை தூவப்பட்டு, சின்னமன் ஸ்வீட் டேஸ்ட் சேர்க்கப்படும் – அதனால் இது “Churros + Bungeoppang” கலப்பு பதிப்பாக உருவாகியுள்ளது.
பொருட்கள் (Ingredients):
மைதா மாவு – 1 கப்
பேக்கிங் பவுடர் – ½ டீஸ்பூன்
சர்க்கரை – 3 டேபிள் ஸ்பூன்
உப்பு – ஒரு சிட்டிகை
பால் – ¾ கப்
முட்டை – 1
வெண்ணெய் (கரைத்தது) – 2 டேபிள் ஸ்பூன்
வனிலா எசென்ஸ் – ½ டீஸ்பூன்
சாக்லேட்/கஸ்டர்ட் கிரீம்/நடெல்லா – தேவையான அளவு (நிரப்புவதற்கு)
சின்னமன் பவுடர் மற்றும் பவுடர் சர்க்கரை – மேல் தூவ

தயாரிக்கும் முறை (Preparation Method):
மாவு தயாரித்தல்:
ஒரு பெரிய பாத்திரத்தில் மைதா, பேக்கிங் பவுடர், சர்க்கரை, உப்பு சேர்த்து கலக்கவும்.
அதில் பால், முட்டை, கரைத்த வெண்ணெய், வனிலா எசென்ஸ் சேர்த்து மென்மையான பேட்டர் போல் கலந்து கொள்ளவும்.
பேக்/அல்லது கிரில் செய்தல்:
மீன் வடிவ Bungeoppang மோல்டு (fish-shaped waffle mold) வெப்பமூட்டவும்.
அதில் சிறிதளவு மாவு ஊற்றி, மத்தியில் சாக்லேட் அல்லது கஸ்டர்ட் கிரீம் வைக்கவும்.
அதன் மேல் மீண்டும் மாவு ஊற்றி, மோல்டை மூடி இருபுறமும் பொன்னிறமாக வரும்வரை சுடவும்.
சர்க்கரை-சின்னமன் பூச்சு:
தயாரான Bungeoppang மீது சிறிது வெண்ணெய் தடவி, சின்னமன் பவுடர் மற்றும் பவுடர் சர்க்கரை தூவி கிளாசிக் Churros Touch கொடுக்கவும்.
சூடாக பரிமாறவும்!
இதை சாக்லேட் டிப் அல்லது கரமேல் சாஸ் உடன் பரிமாறலாம்.
English Summary
flying fish with scent cinnamon Churros Bungeoppang storm that warm up winter