அழுத்தம் கொடுக்கும் அமெரிக்கா: இராணுவ உபகாரணங்களுக்கு ரஷ்யாவை நாடும் வெனிசுலா: தீவிரமடையும் போர் பதற்றம்..!
Venezuela seeks Russia for military equipment
வெனிசுலா மீது அமெரிக்கா அழுத்தத்தை அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம் இராணுவ உதவி கேட்டுள்ளதாக செய்தியால் வெளியாகியுள்ளன. வெனிசுலாவின் பாதுகாப்பு ரேடார்களை நவீன மயமாக்குவதற்கும் இராணுவ உபகரணங்களை பழுது பார்ப்பதற்கும் உதவி கோரி நிக்கோலஸ் மதுரோ, விளாடிமிர் புடினுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் ஏவுகணை விநியோகத்திற்கான கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வெனிசுலா, சீனா மற்றும் ஈரானிடமிருந்து இராணுவ ஆதரவையும் நாடியுள்ளதாக கூறப்படுகிறது.
அதேநேரத்தில், அமெரிக்காவிற்கும் வெனிசுலாவிற்கும் இடையிலான மோதலை எதிர்கொள்ள விரிவாக்கப்பட்ட இராணுவ ஒத்துழைப்பை கேட்டு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்கு மதுரோ ஒரு கடிதம் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

வெனிசுலாவிலிருந்து போதைப்பொருள் கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் 15க்கும் மேற்பட்ட கப்பல்களை அமெரிக்கா அளித்துள்ளதாகவும், கரீபியன் மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடல்களில் அமெரிக்கப் படைகள் நடத்திய தொடர் தாக்குதல்களில் 62-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் எந்த பொது ஆதாரமும் சமர்ப்பிக்கப்படவில்லை என சர்வதேச ஊடகங்களில் செய்தியால் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ட்ரென் டி அரகுவா போன்ற வெனிசுலா குற்றக் கும்பல்களை குறிவைத்து நடத்தப்படும் பரந்த போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை, சட்டவிரோதமானது என ஐக்கிய நாடுகள் சபை கடுமையாகக் கண்டித்துள்ளது.

அத்துடன், ஐ.நா. மனித உரிமைகள் தலைவர் இந்த கொலைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், இவற்றை ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் கூறியுள்ளார்.
மேலும், வெனிசுலாவை தாக்குவது குறித்து இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என அறிவித்துள்ள நிலையில், இந்தத் தொடர் தாக்குதல்களுக்கு மத்தியில் வெனிசுலா கடற்கரைக்கு அருகே ஒரு பெரிய அமெரிக்க இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கடுகின்றது.
இதன் காரணமாக, அமெரிக்கா வெனிசுலா மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதல்களை மேற்கொள்ள தயாராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், வெனிசுலாவின் அரச தரப்பில் இருந்தும் வெளியாகும் செய்திகளின் படி, தாங்கள் தாக்குதலுக்கு தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை போர் பதற்றத்தை அதிகரிப்பதை காட்டுவதாக உள்ளதாக கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Venezuela seeks Russia for military equipment