சிறுமி பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை கைதியான சாமியாருக்கு 06 மாத ஜாமீன்: சிறையில் உயிரற்ற நிலைக்கு ஒப்பான நிலையில் இருப்பதாக விளக்கம்..! - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே செயல்பட்டு வந்த ஆசிரம் ஒன்றில், கடந்த 2013-ஆம் ஆண்டு 16 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சாமியார் ஆசராம் கடந்த 2013-ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். 

இந்த வழக்கில், கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அத்துடன், அவரது மகன் நாராயண் சாயும் மற்றொரு பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். இதற்கு முன்னர், ஆசராம் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்கள் பலமுறை நீதிமன்றங்களால் நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆசராம் தரப்பில் அவரது மோசமான உடல்நிலையைக் காரணம் காட்டி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. குறித்த மனுவை பொறுப்பு தலைமை நீதிபதி சஞ்சீவ் பிரகாஷ் சர்மா மற்றும் நீதிபதி சங்கீதா சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, அவருக்கு  ஆயுர்வேத மருத்துவமனை வழங்கிய மருத்துவ அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 

அதில், 86 வயதான ஆசராம்க்கு, தசை வலுவிழப்பு, தொடர்ச்சியான இரைப்பைக் குடல் ரத்தப்போக்கு மற்றும் மலம், சிறுநீர் கழிப்பதில் கட்டுப்பாடின்மை போன்ற கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதால், உடல்நிலை கிட்டத்தட்ட உயிரற்ற நிலைக்கு ஒப்பான நிலையில் இருப்பதாகத் குறிப்பிடப்பட்டு இருந்துள்ளது.

இதனைப் பரிசீலித்த நீதிபதிகள், அமர்வு, குற்றவாளிகள் உட்பட அனைத்து தனிநபர்களுக்கும் போதுமான மருத்துவ சிகிச்சை பெறுவது அடிப்படை உரிமை என்றும், சிறையில் அவருக்குத் தேவையான சிறப்பு மருத்துவ வசதிகள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.  இதையடுத்து, அவருக்கு 06 மாத கால இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அத்துடன், ரூ.1,00,000 சொந்த ஜாமீனும், தலா ரூ.50,000 மதிப்புள்ள இரண்டு நபர் ஜாமீனும் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், தனது ஆதரவாளர்களைச் அவர் சந்திக்கக் கூடாது என்றும், ஆறு மாதங்கள் முடிந்ததும் விரிவான மருத்துவ அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Life sentenced priest in minor rape case granted 6 months bail


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...




Seithipunal
--> -->