அமெரிக்காவில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.4,200 கோடி கடன் மோசடி: இந்திய வம்சாவளி தொழிலதிபர் தலைமறைவு..! - Seithipunal
Seithipunal


இந்திய வம்சாவளியான குஜராத்தை பூர்வீகமாகக் கொண்டவர் பங்கிம் பிரஹம்பட். இவர் அமெரிக்காவில், தொலைதொடர்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் போலியான ஆவணங்கள் தயாரித்து 4,200 கோடி ரூபாய் கடன் மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியதுள்ளது.

அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்த தொழிலதிபரான இவர், நியூயார்க்கில், 'பிராட்பாண்ட் டெலிகாம்' மற்றும் 'பிரிட்ஜ்வாய்ஸ்' ஆகிய நிறுவனங்களை நடத்தி வந்துள்ளார். கடந்த 2023-இல் தொலைதொடர்பு துறையில் திறன் மிக்க, 100 மனிதர்கள் பட்டியலில் இவர் பெயர் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இவர் தன் நிறுவனத்தின் பெயரில், 2020 முதல் கடன் வாவாங்கியுள்ளார். இதற்கான வருவாய் ஆதாரங்கள், வாடிக்கையார் நிறுவனங்கள் உள்ளிட்ட ஆவணங்களை அமெரிக்க தனியார் நிதி நிறுவனமான, 'பிளாக்ராக்'கிடம் சமர்பித்துள்ளார். அதன் அடிப்படையில் பங்கிமின் நிறுவனம், 2021 வரை 3,400 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளது. குறித்த கடன் தொகை, 2024-இல், 4,200 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதனையடுத்து, கடந்த ஜூலையில், 'பிளாக்ராக்' நிறுவனம் அவரது கணக்குகளை ஆய்வு செய்துள்ளது. இதன் போது கடன் பெறுவதற்காக போலி ஆவணங்கள் உருவாக்கப்பட்டிருந்தது கண்டிப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், கடனுக்கான அடமான சொத்துக்களை மொரீஷியஸ் மற்றும் இந்தியாவில் உள்ள கணக்குகளுக்கு மாற்றியதும் தெரிய வந்துள்ளது.

இது குறித்து, 'பிளாக்ராக்' நிறுவனம் ஆகஸ்டில் பங்கிம் மீது வழக்கு பதிவுசெய்துள்ளது.  ஆனால், அதே மாதத்தில் அவர் தன் நிறுவனத்தை திவால் என அறிவிக்கக் கோரி நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

இந்நிலையில், அவர் மீதான வழக்கு குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த பங்கிமின் நியூயார்க் வீட்டுக்கு சென்றுள்ளனர். அப்போது அவருடைய வீடு பூட்டப்பட்டிருந்தது. அத்துடன், விலையுயர்ந்த கார்கள் தூசி படிந்து கைவிடப்பட்ட நிலையில் இருந்துள்ளன. அவரது அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன. அவர் இந்தியாவுக்கு தப்பி இருக்கலாம் என கருதுகின்றனர். இது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Indian origin businessman who committed Rs 4200 crore loan fraud in US absconds


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...




Seithipunal
--> -->