தமிழ் தெரியாத அஜித்திலிருந்து car வேகத்தின் ராஜா வரை...! -ஆனால் ஏன் திடீரென மனம் திறந்தார்...?
From Ajith who doesnt know Tamil king speed But why did he suddenly open his mind
தமிழ் திரையுலகின் மெகா ஸ்டாரும், வேகத்தின் வித்தகருமான அஜித் குமார், தனது புதிய கட்டம் குறித்து வெளிநாட்டிலிருந்து பகிர்ந்துள்ள உருக்கமான பேட்டி தற்போது இணையம் முழுவதும் பேசுபொருளாகியுள்ளது.சினிமா, பந்தயம், வாழ்க்கை மூன்றையும் சமநிலையில் வைத்திருக்கும் அஜித், தன் ஆரம்பகால போராட்டத்திலிருந்து இன்றைய வெற்றிவரை தன் மனதை திறந்துள்ளார்.அவர் தெரிவித்ததாவது,"நான் சினிமாவுக்கு வந்த போது தமிழே பேச தெரியாது.

மொழியை கற்றுக்கொள்ள கடுமையாக உழைத்தேன். அந்த பயணம் எளிதல்ல.சிலர் ‘உன் பெயர் பிரபலமாக இல்லை… மாற்று!’ என்றார்கள். ஆனால் நான் என் பெயரே என் அடையாளம் என்று நம்பினேன். சினிமாவுக்காக என் நிஜத்தை மாற்ற விரும்பவில்லை".அஜித் மேலும் குறிப்பிட்டதாவது,"எனது வெற்றிகள் எந்தவையும் சுலபமாக கிடைத்தவை அல்ல. ஒவ்வொரு சாதனையும் கடின உழைப்பின் விளைவு.கார் பந்தயம் என் இரண்டாவது உயிர் போல.
இன்று கூட 19 வயது இளைஞனின் உற்சாகத்துடன் பந்தயத்திற்குத் தயாராகிறேன்".அவரிடம், ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்ட் நடித்த ‘F1’ படத்தைப்போல் இந்தியாவில் படம் எடுத்தால் நடிப்பீர்களா என கேட்கப்பட்டதற்கு, அவர் சிரித்தபடி,“இந்த விளையாட்டை இந்தியாவில் பிரபலப்படுத்த முடியுமானால், அது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி!” என்று பதிலளித்தார்.
அஜித் மேலும் குறிப்பிட்டதாவது,"கார் ரேசிங் என்பது வேகத்துடன் மட்டுமல்ல, அறிவும் விழிப்புணர்வும் தேவைப்படும் துறையும்கூட.நான் பல விபத்துகளைச் சந்தித்துள்ளேன், 29 அறுவை சிகிச்சைகளையும் எடுத்துள்ளேன்.ஆனால் அந்த வலி கூட எனது ஆர்வத்தை அடக்கவில்லை.நான் நடிகன் என்பதால் அதெல்லாம் பேசப்படுகிறது, ஆனால் இது எல்லாம் ஒரு பந்தய வீரனின் சாதாரண பாதை தான்".
பொருளாதாரம் மற்றும் வாழ்க்கை குறித்து பேசும்போது,"வெற்றி என்பது காட்டுக்குதிரை மாதிரி. யாரும் அதில் ஏறலாம், ஆனால் அதை கட்டுப்படுத்த முடியாவிட்டால் அது உன்னை கீழே தள்ளிவிடும்.செல்வம் சில சமயம் மனிதனை மாற்றிவிடும்,எனவே தருபவரா, பெறுபவரா என்பதை நாமே தீர்மானிக்க வேண்டும்.”தனது அடுத்த கட்டம் குறித்து,"மார்ச் மாதம் வரை கார் பந்தயங்களில் பிசியாக இருப்பேன். எனவே இதற்குள் புதிய படப்பிடிப்பில் பங்கேற்க முடியாது.
ஆனால், என் அடுத்த படத்தின் அறிவிப்பு ஜனவரி மாதத்தில் வெளியாகும்".அவர் முடிவில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்ததாவது,"என் நீண்ட பயணத்தில் எனக்கு துணையாக இருக்கும் என் மனைவி ஷாலினி, என் குழந்தைகள், சக நடிகர்கள், மற்றும் ரசிகர்கள் எல்லோருக்கும் என் இதயபூர்வ நன்றி".இதேவேளை, ‘Good Bad Ugly’ படத்திற்குப் பிறகு, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படம் வரவிருப்பது உறுதி.இது அஜித்தின் 64-வது திரைப்படம், மேலும் ரசிகர்கள் இதற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
English Summary
From Ajith who doesnt know Tamil king speed But why did he suddenly open his mind