கங்கையில் நீராடிய பிறகே சைவத்துக்கு மாறினேன்: வாரணாசியில் துணை ஜனாதிபதி..!
Vice President in Varanasi says he converted to Saivism only after bathing in the Ganges
காசி நாட்டுக்கோட்டை நகரச் சத்திரம் மேலாண்மை சங்கம் சார்பில், காசியில் ரூ.60 கோடி செலவில் பத்து மாடிகளைக் கொண்ட பிரம்மாண்ட தர்ம சத்திரம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.
விழாவில் பேசிய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், ‘தர்மத்திற்கு தற்காலிகமாக சோதனைகள் வரலாம், ஆனால், அது ஒருபோதும் நிரந்தரமாகாது என்றும், எத்தனையோ சோதனைகளைக் கடந்தாலும், இறுதியில் தர்மமே வென்றுள்ளது என்பதற்கு இந்த தர்மசத்திர கட்டிடம் ஒரு சான்றாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அப்போது தனது பழைய நினைவுகளைப் துணை ஜனாதிபதி பகிர்ந்துகொண்டார். 'சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு காசிக்கு வந்தபோது, தான் அசைவ உணவுப் பழக்கம் கொண்டிருந்தாகவும், 2000-ஆம் ஆண்டில் இங்கு கங்கையில் நீராடிய பிறகே சைவமாக மாறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது, அந்த மாற்றம் காசியில்தான் தனக்கு நிகழ்ந்தது என்றும், அதன்பிறகு 2014-இல் பிரதமர் மோடிக்காகப் பிரசாரம் செய்ய வந்தேன் என்று தெரிவித்துள்ளார். அன்று நான் கண்ட காசிக்கும், இன்றைய காசிக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளதாகவும் என்றும் கூறியுள்ளார். இது சாத்தியமற்றது என்று தோன்றிய இந்த மாபெரும் மாற்றம், பிரதமர் மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் போன்ற கர்மயோகிகளால் மட்டுமே சாத்தியமானது என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Vice President in Varanasi says he converted to Saivism only after bathing in the Ganges