புல் போதையில் பீர் பாட்டிலுடன் ஆட்டோவில் ரகளை செய்த பெண் யுடியூபர்: போலீசாரிடம் ஆபாசமாக வாக்குவாதம்; நீதிமன்றத்தில் புலம்பல்..!
Female YouTuber creates ruckus in auto with beer bottle in Chennai
சென்னை பாடி பகுதியை சேர்ந்தவர் 34 வயதுடைய ரேவதி. இவர் யு டியூப் சேனல் நடத்தி வருகின்ற நிலையில்,தனது மாமா ராஜாவுடன் தி.நகர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு அங்கிருந்து ரேபிடோ ஆட்டோவில் ஏறியுள்ளனர். ஆட்டோவில் ஏறிய ரேவதி கையில் வைத்திருந்த பீரை அருந்தியுள்ளார்.
பின்னர் கோயம்பேட்டில் உள்ள தேர்தல் ஆணையம் அலுவலகம் அருகே வந்த போது ரேவதி திடீரென்று ஆட்டோவை நிறுத்தச்சொல்லி அதில் இருந்தபடி மேலும் பீர் அருந்திக்கொண்டு சத்தமாக பேசியுள்ளார். இதனால், பதற்றம் அடைந்த ரேபிடோ ஆட்டோ டிரைவர், 'மேடம் சவாரி செய்த பணத்தை கொடுத்துவிடுங்கள், நான் சென்றுவிடுகிறேன்' என்று கேட்டுள்ளார். ஆனால், ரேவதி, பணம் கொடுக்காமல் ஆட்டோ டிரைவர் மற்றும் பொதுமக்களிடம் தகராறு போதையில் செய்துள்ளார்.

இது குறித்து கோயம்பேடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த நான்கு போலீசார் ரேவதியை எச்சரித்து வீட்டுக்கு போகும்படி தெரிவித்துள்ளனர். அதற்கு ரேவதி, 'அது எங்களுக்கு தெரியும் உங்க வேலையை பாருங்கள்' என்று கூறியதோடு, போலீசார் பற்றி இழிவாக பேசியதாக கூறப்படுகிறது.
இதயனையடுத்து, ரேவதியின் செயல்பாடுகளை போலீசார் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். அதற்கு பதிலாக ரேவதியும் தனது செல்போனில் போலீசாரின் செயல்பாடுகளை வீடியோ எடுத்துள்ளார். இதனால் அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் வந்து சமாதானப்படுத்தி அங்கிருந்து ரேவதியை அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து ரேவதி தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள வீடியோவில் கூறியியுள்ளதாவது:
மதுபோதையில் தகராறு செய்த என்மீது தவறு உள்ளது. போலீசாரை ஆபாச வார்த்தைகளால் திட்டியதை மறுக்கவில்லை. என்னிடம் பேசுவதற்கு பெண் போலீசார் வரவேண்டும், ஆனால், சம்பவ இடத்தில் பெண் போலீசார் யாரும் இல்லை. 04 போலீசார் என்னை தாக்கியதில் கை, கால்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. எனது மாமா ராஜாவின் சட்டை பாக்கெட்டில் இருந்து 15 ஆயிரம் ரூபாய், செல்போனை பறிமுதல் செய்துள்ளனர். நான் தவறு செய்ததை ஒப்புக்கொள்கிறேன். என்னை இழிவாக பேசி தாக்கியதால் மிகவும் மன உளைச்சலில் இருக்கிறேன். என்னை தாக்கியதற்கு 4 போலீசார்தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொள்வேன்.'' என்று மிரட்டியுள்ளார்.

இந்த நிலையில், போலீசாரை ஆபாசமாக பேசி பணிகளை செய்யவிடாமல் தடுத்ததாக அவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். அத்துடன், நேற்றிரவு ரேவதியை கைது செய்தனர். அப்போது ரேவதி, 'என்னை கைது செய்வதற்கு வாரண்ட் உள்ளதா? என்று கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். இதையடுத்து ரேவதி, அவரது மாமா ஆகியோரை கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றிச்சென்று கோயம்பேடு காவல் நிலையத்துக்கு கொண்டுவந்து விசாரித்துள்ளனர்.
இதன்பின்னர் அவர்களை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது ரேவதி, 'போலீசாரை திட்டியது தவறுதான், ஆனால் பெண் என்றுகூட பார்க்காமல் என்னை இழிவாக பேசி போலீசார் தாக்கினர்'என்று தெரிவித்துள்ளார். விசாரணைக்கு பிறகு நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று அறிவித்து 02 பேரையும் அனுப்பி வைத்துள்ளனர்.
இது குறித்து ரேவதி கூறுகையில், 'வாடகை ஆட்டோவில் அமர்ந்து மது அருந்தியது தப்புதான். அங்கு வந்த போலீசாரை திட்டியதும் தவறுதான். போலீசாரை திட்டியதை மட்டும் வீடியோ எடுத்து அந்த வீடியோக்களை வைத்து என்னை கைது செய்து சிறையில் அடைப்பதற்கு முயற்சி செய்கின்றனர்.போலீசார் என்னை இழிவாக பேசி தாக்கியுள்ளனர். இதுகுறித்து மனித உரிமை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்க உள்ளேன்' என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Female YouTuber creates ruckus in auto with beer bottle in Chennai