எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூடுகிறது அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!
ADMK Edappadi pazhanisamy DS Meet
அதிமுக தலைமை அலுவலகத்தில் வரும் நவம்பர் 5ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து கட்சி தலைமையகம் வெளியிட்ட அறிவிப்பில், கூட்டம் காலை 10.30 மணிக்கு தொடங்கும் என்றும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் மாநிலத்தின் அனைத்து மாவட்ட செயலாளர்களும் கட்டாயமாக கலந்து கொள்ள வேண்டும் எனவும் கட்சி தலைமையகம் அறிவித்துள்ளது.
இந்தக் கூட்டத்தில், கட்சியின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள், வரவிருக்கும் தேர்தல் தயாரிப்புகள் மற்றும் அமைப்புசார் பணிகள் குறித்து விரிவான ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
ADMK Edappadi pazhanisamy DS Meet