ரஷிய ராணுவத்தின் எரிபொருள் குழாய்களைத் தகர்த்த உக்ரைன்!
Ukrainian forces hit fuel pipeline in Russian army
ரஷியாவின் மாஸ்கோ அருகே உள்ள எரிபொருள் சேமிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் நடத்திய துல்லியமான தாக்குதல்கள் ரஷிய ராணுவத்தின் எரிபொருள் விநியோகத்தை கடுமையாக பாதித்துள்ளன.
ரஷிய ராணுவத்திற்கு எரிபொருள் விநியோகிக்கும் முக்கிய வழித்தடமாக கோல்ட்செவோய் குழாய்வழி பயன்படுத்தப்படுகிறது. மாஸ்கோ, ரையாஸன், நிஸ்நி நோவ்கொரோட் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து இந்த குழாய்வழி டீசல், கேசொலின், ஜெட் எரிபொருள் உள்ளிட்டவை சுமார் 400 கிலோமீட்டர் தூரம் கடந்து ராணுவ தளங்களுக்கு அனுப்பப்படுகின்றன.
இந்த குழாய்வழி வழியாக ஆண்டுதோறும் சுமார் 30 லட்சம் டன் ஜெட் எரிபொருள், 28 லட்சம் டன் டீசல் மற்றும் 16 லட்சம் டன் கேசொலின் போக்குவரத்து செய்யப்படுகிறது. இது ரஷிய ராணுவத்துக்கான முக்கிய எரிபொருள் ஆதாரமாக கருதப்படுகிறது.
இந்நிலையில், அக்டோபர் 31ஆம் தேதி நள்ளிரவில் மாஸ்கோவின் ராமென்ஸ்கி மாவட்டத்தில் உக்ரைன் நடத்திய தாக்குதலால் மூன்று முக்கிய எரிபொருள் குழாய்கள் சேதமடைந்ததாக உக்ரைனின் ராணுவ புலனாய்வு முகமை (HUR) தனது டெலிகிராம் பதிவில் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் ரஷியாவின் எரிபொருள் போக்குவரத்துக்கு பெரும் தடையாக அமைந்துள்ளதாகவும், சேதமடைந்த குழாய்கள் சரிசெய்யப்படும் வரை ராணுவத்தின் எரிபொருள் விநியோகம் தற்காலிகமாக சீர்குலைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
English Summary
Ukrainian forces hit fuel pipeline in Russian army