பாட்பிங்சு புயல் கொரியாவை சூழ்கிறது!-இனிப்பு, குளிர்ச்சி, ஸ்டைல் மூன்றும் சேர்ந்து ஒரு சென்சேஷன்...!
Batbingsu storm sweeping Korea Sweet cool and stylish all three together make sensation
Patbingsu கொரியாவின் பிரபலமான ஐஸ் டெசர்ட், வெப்பமான காலங்களில் சுவையாகவும் தணிவாகவும் பரிமாறப்படும் ஒரு இனிப்பு உணவு. இதன் சிறப்பம்சம், மென்மையான ஷேவ் செய்யப்பட்ட ஐஸ் மீது பலவிதமான டாப்பிங்ஸ் சேர்த்தல். குறிப்பாக ரெட் பீன் பேஸ்ட், பழங்கள், கண்டென்ஸ்டு மில்க், மற்றும் ஜெல்லிகள்.
Patbingsu என்பது கொரியாவில் மிகவும் பிரபலமான கோடைக்கால இனிப்பு உணவு. “Pat” என்றால் ரெட் பீன் (அட்ஸ் பீன்) என்றும் “Bingsu” என்றால் ஷேவ் செய்யப்பட்ட ஐஸ் என்றும் பொருள். இது பழைய காலங்களில் எளிய பீன்ஸ் மற்றும் ஐஸ் கலவையாக இருந்தது. இப்போது இது பழங்கள், ஐஸ்கிரீம், ஓரியோ, சாக்லேட் சாஸ் போன்ற பல்வேறு வகை டாப்பிங்களுடன் மிக அழகாக பரிமாறப்படுகிறது.
தேவையான பொருட்கள் (Ingredients):
ஐஸ் – 2 கப் (நன்றாக நறுக்கியது அல்லது ஷேவ் செய்தது)
ரெட் பீன் பேஸ்ட் – 3 டேபிள் ஸ்பூன்
கண்டென்ஸ்டு மில்க் – 2 டேபிள் ஸ்பூன்
வெட்டிய பழங்கள் (ஸ்ட்ராபெரி, கிவி, வாழை, மாம்பழம்) – தேவையான அளவு
ஸ்வீட் ஜெல்லி அல்லது மோச்சி பால் பந்துகள் – விருப்பப்படி
வனில்லா ஐஸ்கிரீம் (விருப்பப்படி) – 1 ஸ்கூப்

செய்முறை (Preparation Method):
ஐஸை தயார் செய்யவும்: பிளெண்டரில் ஐஸை நன்றாக நறுக்கி மென்மையான பனித்துளி போல் ஆக்கவும்.
பாத்திரத்தில் அடுக்கவும்: ஒரு பெரிய கிண்ணத்தில் ஐஸை சேர்த்து மலை போல் அடுக்கவும்.
டாப்பிங்ஸ் சேர்க்கவும்:
மேல் பகுதியில் ரெட் பீன் பேஸ்டை பரப்பவும்.
அதன் மேல் பழ துண்டுகள், மோச்சி பந்துகள், ஜெல்லி மற்றும் ஐஸ்கிரீம் சேர்க்கவும்.
மில்க் சேர்க்கவும்: கடைசியாக கண்டென்ஸ்டு மில்க் சில துளிகளை மேலே ஊற்றவும்.
சர்வ் செய்யவும்: உடனடியாக பரிமாறவும் — குளிர்ந்த சுவையில் நாக்கை உறையச் செய்யும் இனிப்பு அனுபவம்.
English Summary
Batbingsu storm sweeping Korea Sweet cool and stylish all three together make sensation