சூப்பர் பா! உதவிக்கரம் நீட்டிய கமல்ஹாசன்..! வறுமையில் வாடிய 562 மதிப்பெண் எடுத்த மாணவி...!
Kamal Haasan extended a helping hand student who scored 562 marks and was living in poverty
சமீபத்தில் நடந்து முடிந்த பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ''சோபனா'' 600க்கு 562 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

ஏழ்மையில் வாடும் குடும்பத்தைச் சேர்ந்த சோபனா, வீட்டின் நிலையை உணர்ந்து நன்று படித்து நல்ல மதிப்பெண்களை பெற்றுள்ளார்.இவர் மீனவ குடும்பத்தில் பிறந்த மாணவி வறுமை காரணமாக வேலைக்குச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தார்.
இருப்பினும், குடும்ப வறுமை காரணமாக மேற்படிப்பு தொடர முடியுமா? என்ற கேள்வி எழுந்தது.இந்நிலையில், மக்கள் நீதி மையம் தலைவரும், நடிகருமான ''கமல்ஹாசன்'' ஏழை மாணவிக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
குடும்ப சூழலால் படிப்பை தொடரமுடியாமல், தவித்து வந்த ராமநாதபுரம் மாணவி சோபனாவிற்கு உயர்கல்விக்கான உதவிகளைச் கமல்ஹாசன் செய்துள்ளார்.
மேலும் கமல்ஹாசன் , மாணவியின் கனவை எட்ட, குடிமைப்பணித் தேர்வுகளுக்கு தயாராவதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துள்ளார்.இதை இணையத்தில் பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் தங்களது ஆதரவுகளையும் தந்து வருகின்றனர்.
English Summary
Kamal Haasan extended a helping hand student who scored 562 marks and was living in poverty