ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசை சமர்ப்பித்துள்ள மரியா கொரினா மச்சாடோ..!
Maria Machado presents Nobel Prize to Trump
தனக்கு வழங்கப்பட்டுள்ள அமைதிக்கான நோபல் பரிசை வெனிசுலா மக்களுக்கும், தனக்கு தொடர்ந்து உறுதியான ஆதரவை அளித்துவரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கும் அர்பணிப்பதாக அமைதிக்கான நோபல் பரிசு வென்ற வெனிசுலா எதிர்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ அறிவித்துள்ளார்.
ஏற்கனவே மருத்துவம், இயற்பியல், வேதியியல் மற்றும் இலக்கியத்துக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், 2025-ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கொரினா மச்சோடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதற்காகவும், சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்திற்கு நியாயமான மற்றும் அமைதியான மாற்றத்தை அடைவதற்கான அவரது போராட்டத்திற்காகவும் மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலகையில், மரியா கொரினா மச்சாடோ இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது; 'அமைதிக்கான நோபல் பரிசு அனைத்து வெனிசுலா மக்களின் போராட்டத்திற்கும் கிடைத்த அங்கீகாரம். இந்த விருதை வெனிசுலாவின் துக்கத்தில் இருக்கும் மக்களுக்கும், ஜனநாயக ஆதரவு இயக்கத்திற்கு உறுதியான ஆதரவை வழங்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கும் அர்ப்பணிக்கிறேன். இது எனது அனைத்து வெனிசுலா மக்களின் போராட்டத்திற்கும் கிடைத்த அங்கீகாரமாகும் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், கூடுதலாக, எங்கள் பணியை முடித்து சுதந்திரத்தை அடைய நாங்கள் ஊக்குவிக்கப்பட்டுள்ளோம் என்றும், இன்று நாம் வெற்றியின் விளிம்பில் இருக்கிறதாகவும், எப்போதையும் விட, சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை அடைவதில் எங்கள் முக்கிய கூட்டாளிகளாக ஜனாதிபதி டிரம்ப், அமெரிக்க மக்கள், லத்தீன் அமெரிக்க மக்கள் மற்றும் உலக ஜனநாயக நாடுகளை நாங்கள் நம்புகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Maria Machado presents Nobel Prize to Trump