தங்கத்திற்கு பதில் இந்த 5 உலோகங்களை வாங்கலாமா? ஆய்வாளர்களின் கருத்து என்ன?!
Gold Price
1970ஆம் ஆண்டு ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.3.32 இருந்தது. இன்று அது ரூ.11,500-ஐ தாண்டியுள்ளது. இதனால் தங்க நகைகளை வாங்குவது ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு கடினமானதாகிவிட்ட நிலையில், விஞ்ஞானிகள் தங்கத்துக்கு மாற்றாக விலை குறைவான, அழகிய தோற்றமளிக்கும் உலோகங்களை ஆராய்ந்து வருகின்றனர்.
அதில் தங்கத்திற்கு மாற்றாக பிளாட்டினம், பல்லேடியம், டைட்டானியம், டங்ஸ்டன், வெள்ளி என ஐந்து உலோகங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதில்,
பிளாட்டினம் – தங்கத்தை விட அரிதானதும் விலையுயர்ந்ததுமானது. ஆனால் நீடித்த தன்மை கொண்டது, தோலில் ஒவ்வாமை ஏற்படுத்தாது, பிரகாசம் காரணமாக உயர்தர நகைகளில் பயன்படுத்தப்படுகிறது.
பல்லேடியம் – பிளாட்டினத்துடன் ஒத்த பண்புகள் கொண்டது. வெள்ளை நிறம், எடை குறைவு என்பதால் மோதிரங்கள், சங்கிலிகள் போன்ற நகைகளுக்கு ஏற்றது.
டைட்டானியம் – இலகுவானதும் வலிமை மிகுந்ததும். ஒவ்வாமை ஏற்படாததால் ஆபரண உற்பத்தியில் பெரிதும் பயன்படுகிறது.
டங்ஸ்டன் – மிக வலிமை வாய்ந்தது; கீறல் எளிதில் வராது. சமீபத்தில் ஆண்கள் மோதிரங்களில் அதிகம் விரும்புகின்றனர்.
வெள்ளி – மலிவு விலை காரணமாக பழங்காலத்திலிருந்தே பயன்பாட்டில் உள்ளது. ஆனால் விரைவில் கருமை படர்வது இதன் குறையாகும்.
மேலும் டைட்டானியம் நைட்ரேட் போன்ற பூச்சுகள் மூலம் பிற உலோகங்களுக்கும் தங்கம் போன்ற தோற்றத்தை அளிக்கலாம். வெள்ளி மற்றும் தங்க கலவைகளை நானோ அளவில் வடிவமைத்து, பல வண்ணங்களில் பிரகாசமான நகைகள் உருவாக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.