'காசாவில் அமைதி ஒரு வரலாற்று சாதனை': அமைதிக்காக டிரம்ப் நிறைய செய்கிறார்: விளாடிமிர் புடின் புகழாரம்..!
Vladimir Putin praises Trump for doing a lot for peace
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அமைதிக்காக நிறைய செய்கிறார் என பாராட்டு தெரிவித்துள்ளார். ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடியதற்காக வெனிசுலா நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினோ மச்சாடோ 2025-ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து ரஷ்ய அதிபர் புடின் கூறியுள்ளதாவது:
உலகில் சமாதானத்தை மேம்படுத்துவதற்கு பெரும் பங்களிப்பை டிரம்ப் செய்துள்ளார் என்றும், டிரம்ப் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தகுதியானவரா என்பதை தீர்மானிப்பது அவரது தனிச்சிறப்பு அல்ல. காசாவில் அமைதி உண்மையிலேயே ஒரு வரலாற்று சாதனை என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சமூக வலைதளத்தில் டொனால்டு டிரம்பைப் பாராட்டி பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: 'நோபல் குழு அமைதியைப் பற்றிப் பேசுகிறது. அதிபர் டொனால்டு டிரம்ப் அதைச் சாத்தியமாக்குகிறார். 'என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Vladimir Putin praises Trump for doing a lot for peace