புடின் இந்தியா வருகை; ரஷ்யாவிடமிருந்து போர் விமானங்கள், எஸ் 500 பாதுகாப்பு கவசம் வாங்க திட்டம்..!
India plans to buy fighter jets and S500 missile defense systems from Russia
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, ரஷ்யா பிரதமர் விளாடிமிர் புடின் வரும் டிசம்பர் 04 மற்றும் 05-ஆம் தேதிகளில் இந்தியாவிற்கு வருகை தரவுள்ளார்.
அப்போது அவர் பிரதமர் மோடியை சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சு நடத்தவுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த பின் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் முதல் இந்திய பயணம் இது என்பதால் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதற்கு முன், புடின் கடந்த 2021 டிசம்பர் மாதம் இந்தியாவிற்கு வருகைத் தந்துள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா மீதி மீது கூடுதல் வரிகளை விதித்தார். இதையடுத்து, ரஷ்யாவுடன் கச்சா எண்ணெய் வாங்குவதை மத்திய அரசு குறைத்துள்ளது. இந்த நிலையில், ரஷ்ய அதிபர் புடினின் இந்திய வருகை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

புடின் வருகையின் போது இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தையில் போர் விமானங்கள் மற்றும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை வாங்குவது குறித்து இந்தியா விவாதிக்கத் திட்டமிட்டுள்ளது. அத்துடன், பிரதமர் மோடி உடன் புடின் சந்திப்பின் போது, ரஷ்யாவின் அதிநவீன எஸ்யூ-57 போர் விமானங்கள் மற்றும் எஸ்-500 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளது.
மேலும், எஸ் 500 என்பது உலகின் முன்னணி ஏவுகணை பாதுகாப்பு கவச வாகனம் ஆகும். இது, ஆப்பரேஷன் சிந்துாரில் இந்தியா பயன்படுத்திய எஸ் 400 கவச வாகனத்தை காட்டிலும் சக்தி வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
புடினின் வருவாய் மற்றும் இருதரப்பு பேச்சு வார்த்தை குறித்து இந்தியப் பாதுகாப்புத் துறைச் செயலர் ராஜேஷ் குமார் சிங் கூறியதாவது: ''இந்தியா- ரஷ்யாவுடனான தனது பாதுகாப்பு ஒத்துழைப்பை இப்போதைக்கு நிறுத்த விரும்பவில்லை. தொடர்ந்து இந்தியா ரஷ்யா மற்றும் அமெரிக்க ஆகிய இரண்டு நாடுகளிடமிருந்தும் ஆயுதங்களை கொள்முதல் செய்யும்.'' என்று தெரிவித்துள்ளார்.
English Summary
India plans to buy fighter jets and S500 missile defense systems from Russia