திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி: மதுரை நீதிமன்றம் தீர்ப்பு..!
Permission to light the Karthigai Deepam in the lamp at the top of the Thiruparankundram hill
மதுரை, திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் மண்டபம் அருகிலுள்ள மண்டபத்தின் மேல் சுப்பிரமணிய சுவாமி கோவில் சார்பில் ஆண்டு தோறும் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது.
மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது காலங்காலமாக நடந்து வந்த நிலையில், இரண்டாம் உலகப்போரின் போது, பாதுகாப்பு காரணமாக, ஆங்கிலேய அரசு அதை தடை செய்தது. அதன் பின்னர் கோவில் முன்புறம் உள்ள துாணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. அந்த நடைமுறை இதுவரை மாறாமல் தொடர்ந்து வருகிறது.
காலங்காலமாக நமது மூதாதையர்கள் நடைமுறையில் இருந்த திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க உத்தரவிட கோரியும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மதுரையை சேர்ந்த எழுமலை ராம ரவிக்குமார் என்பவர் இந்த விவகாரம் குறித்து மனுத்தாக்கல் செய்தார். அதில் அவர் குறிப்பிட்டதாவது:

''திருப்பரங்குன்றம் மலை யில் டிசம்பர் 03 இல் கார்த்திகை தீபம் ஏற்ற ஏற்பாடு செய்ய, சுப்பிரமணியசுவாமி கோவில் நிர்வாகத்திற்கு மனு அனுப்பினேன். மலை உச்சியிலுள்ள, பழமையான தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற சட்ட ரீதியாக தடை இல்லை. தர்காவில் இருந்து, 15 மீட்டர் தொலைவில் உள்ளது. பதிலாக, மலையிலுள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்ற கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அது சட்ட விரோதம். தீபத்துாணில் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும்.'' என்று
குறிப்பிட்டு இருந்தார்.
குறித்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அறநிலையத்துறை தரப்பு மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் வாதிடுகையில், 'பாரம்பரியமாக உச்சிப்பிள்ளையார் கோவில் தீபத்துாணில் தீபம் ஏற்றப்படுகிறது. தவறான உள்நோக்கில், ஆதாரம் குறிப்பிட்டார்.
இருதரப்பு வாதங்களை விசாரித்த நீதிபதி, திருப்பரங்குன்றம் மலை உச்சிக்கு நேரில் சென்றும் பார்வையிட்டார். இதனை தொடர்ந்து விசாரணை முடிவில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, இந்து சமயநிலையத்துறை மற்றும் வக்பு வாரியத்தின் கருத்துக்களை கேட்ட நீதிபதி, மலை உச்சியில் இருக்கும் தீபத்துாணிலும் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என தீர்ப்பளித்துள்ளார்.
English Summary
Permission to light the Karthigai Deepam in the lamp at the top of the Thiruparankundram hill