தமிழக அரசியலில் புதிய திருப்பம்: இன்று தனது கட்சிப் பெயரை அறிவிக்கிறார் சசிகலா...! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் அரங்கில் பரபரப்பு அதிகரித்து வருகிறது. தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்த சூழலில், சமீபத்தில் அரசியல் களத்தில் மீண்டும் களமிறங்கிய சசிகலா, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசை நேரில் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்தது.

சுமார் 90 நிமிடங்கள் நீண்ட இந்த சந்திப்பில் என்ன விவாதம் நடைபெற்றது என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.ஏற்கனவே தனது புதிய கட்சிக்கான கொடியை அறிவித்துள்ள சசிகலா, கட்சியின் பெயரை மட்டும் வெளியிடாமல் வைத்திருந்தார்.

ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24 அன்று கொடி அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இன்று நண்பகல் 12 மணிக்கு தனது புதிய கட்சியின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பு உருவாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

New Twist Tamil Nadu Politics Sasikala Announce Her Party Name Today


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->