மும்பையில் ரத்தன் டாடாவின் ‘தி கேபின்ஸ்’ பங்களா வாடகைக்கு...! - முன்பணம் ரூ.10 கோடி - Seithipunal
Seithipunal


டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா வாழ்ந்து வந்த மும்பை கொலாபாவில் உள்ள அவரது புகழ்பெற்ற பங்களா தற்போது வாடகைக்கு விடப்பட உள்ளது. ‘தி கேபின்ஸ்’ என அழைக்கப்படும் இந்த பிரமாண்ட வீடு நீண்ட காலமாக ரத்தன் டாடாவின் இல்லமாக இருந்தது.

தற்போது இந்த கடல் முகம் பார்த்த பங்களாவை மாதம் ரூ.17.57 லட்சம் வாடகைக்கு விட டாடா குழுமம் முடிவு செய்துள்ளது.

ஐந்து ஆண்டுகள் காலத்திற்கு வாடகை ஒப்பந்தம் செய்யப்படும் என்றும், முன்பணமாக ரூ.10 கோடி செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 13,200 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த ஆடம்பர இல்லம், ஒரு அடித்தளம், தரைத்தளம் மற்றும் மூன்று மேல்தளங்களுடன் அமைந்துள்ளது.

மும்பையின் முக்கிய பகுதிகளில் ஒன்றான கொலாபாவில் அமைந்துள்ள இந்த பங்களா, கடலை நேரடியாக பார்க்கும் சிறப்பையும் கொண்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ratan Tata The Cabins Bungalow Mumbai Up Rent Advance Payment 10 Crores


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->