வேகத்திற்கான பாராட்டு...! - மஹிந்திராவின் உலகின் முதல் Formula E Themed SUV கார் அஜித்துக்கு பரிசு...!
Tribute Speed Mahindra World First Formula E themed SUV Gifted Ajith
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அதற்கு ஈரானும் கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதல்களில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து ஈரான், இஸ்ரேல் மட்டுமின்றி மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க கூட்டணி நாடுகளான பஹ்ரைன், குவைத், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (துபாய், அபுதாபி) மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அந்த நேரத்தில் கார் பந்தயத்தில் பங்கேற்க துபாயில் தங்கி இருந்த நடிகர் அஜித் குமார், தாக்குதல் காரணமாக சில நாட்கள் அங்கு சிக்கியிருந்தார். பின்னர் அவர் பாதுகாப்பாக இருப்பதாக அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்தார்.
அதன்பின் இரண்டு நாட்களுக்கு முன்பு அஜித் பாதுகாப்பாக சென்னை திரும்பினார்.சென்னை திரும்பிய அஜித் குமாருக்கு, அவரது கார் ரேசிங் ஆர்வத்தை பாராட்டும் வகையில் மஹிந்திரா நிறுவனம் சிறப்பு பரிசு வழங்கியுள்ளது.
மஹிந்திரா ஆட்டோமோட்டிவ் பிரிவு தலைவர் ஆர்.வேலுசாமி, உலகின் முதல் Formula E Theme கொண்ட Mahindra BE Edition SUV காரை அஜித் குமாருக்கு பரிசாக வழங்கினார்.
நடிகரும் கார் ரேசருமான அஜித் குமாரின் வேகத்தின் மீதான ஆர்வத்தை பாராட்டும் வகையில் இந்த சிறப்பு கார் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Tribute Speed Mahindra World First Formula E themed SUV Gifted Ajith